தலைமன்னாரில் இருந்து இராமேஸ்வரம் நோக்கி நீச்சல் பயணத்தை ஆரம்பித்த இலங்கை விமானப் படையைச் சேர்ந்த நீச்சல் வீரர்

Date:

இலங்கை விமானப் படையைச் சேர்ந்த நீச்சல் வீரர்  ரோசன் அபேசுந்தர பாக்கு நீரிணையை கடப்பதற்கான பயணத்தை இன்று (10)   சனிக்கிழமை அதிகாலை தலைமன்னாரில் இருந்து ஆரம்பித்துள்ளார்.
-இலங்கையைச் சேர்ந்த நீச்சல் வீரர் ஒருவரின் 50 வருடங்கள் பழமையான கின்னஸ் சாதனையை முறியடிக்கும் நோக்கில் இலங்கை விமானப் படையைச் சேர்ந்த நீச்சல் வீரர்  ரோசன் அபேசுந்தர நீச்சல் பயணத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிய வருகின்றது.
இன்று சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் தலைமன்னார் இறங்கு துறையில் இருந்து  பாக்கு நீரிணையை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
-குறித்த விமானப்படை வீரர் இன்று சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் தனது நீச்சல் பயணத்தை ஆரம்பித்துள்ள நிலையில் பாக்கு நீரினை ஊடாக தனுஸ் கோடியை சென்றடைவார்.
-பின்னர் அங்கிருந்து மீண்டும் தலைமன்னார் நோக்கி வருகை தர உள்ளார்.
குறித்த வீரர் நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மீண்டும் தலைமன்னாரை வந்தடைவார் என தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் நிருபர்

Popular

More like this
Related

பாலஸ்தீன் நாட்டை அங்கீகரித்தல்: ஒரு இராஜதந்திர பார்வை!

உலக நாடுகளின் திடீர் பலஸ்தீன ஆதரவுக் குரலின் தீவிரம் குறித்தும், அதன்...

ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ...

சவூதி அரேபியாவின் 95வது தேசிய தினம்: உலக இஸ்லாமிய சமூகத்திற்கான சவூதியின் அர்ப்பணிப்பு

இம்ரான் ஜமால்தீன் உலக முஸ்லிம் சம்மேளனத்தின் இலங்கைகான பிரதிநிதி   சவூதி அரேபியா இன்று உலக...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (22) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி,...