தேசிய சராசரியை விட அதிகமான இறப்பு விகிதம்! – தடுமாறும் உத்தராகண்ட் அரசு

Date:

கொரோனா

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் அவசியம் நிறுத்தி வைக்கபட்டிருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கொரனோவின் இரண்டாவது அலை மக்களையும், அரசையும், அடிப்படை வாழ்வியலையும் புரட்டி போட்டு வரும் இந்த வேளையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கையில் தேசிய சராசரியை விட அதிகமாகி நிற்கிறது உத்தராகண்ட் மாநிலம்.

இந்தியாவில் உள்ள சிறிய மாநிலங்களில் ஒன்றான உத்தராகண்ட் மாநிலத்தில், அரசு பல்வேறு கொரனோ தடுப்பு நடவடிக்கைகளை அதிகபடுத்தியுள்ள போதும், கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. தற்போது வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை விகிதம் 4.1% ஐ எட்டியுள்ளது, அதே நேரத்தில் இறப்பு விகிதம் 1.4% ஆக உயர்ந்துள்ளது, இது தேசிய சராசரியான 1.13% விட அதிகமாகும்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர், குணமடையும் விகிதம் 69.96% ஆக உள்ளது. இந்த விகிதம் மார்ச் மாதம் வரை 95% ஆக இருந்தது. இரண்டாம் அலை கொரோனாவால் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

இவர்களில் நேற்று மட்டும் 1,471 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். ஐந்து நாட்களில் மட்டும் 250 பேர் இறந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் தொற்று பாதிப்பினால், அம்மாநில அரசு திங்கட்கிழமை முதல் வார ஊரடங்கை பிறப்பித்துள்ளது. டெஹ்ராடூன் மாவட்டம் அதிகபட்ச நோய்தொற்றுக்கு காரணமாக உள்ளது. மேலும் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் அவசியம் நிறுத்தி வைக்கபட்டிருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று சிகிச்சைக்கு என 52 சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...