பூநகரி பள்ளிக்குடா பகுதியில் பொலீஸ் விசேட அதிரடிப்படையினரால் ஒரு தொகை கேரளா கஞ்சா மீட்பு

Date:

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பள்ளிக்குடா பகுதியில் பொலீஸ் விசேட அதிரடிப்படையினரால் ஒரு தொகை கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இவை மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
யாழ் மன்னார் வீதிக்கு அண்மித்த பகுதியில் உள்ள பற்றை ஒன்றில் இவ்வாறு மறைத்து வைக்கப்பட்டிருந்த பொதிகளை இன்று அதிகாலை சோதனையிட்ட போதே இவை மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள் சுமார் 150 கிலோ எடையை உடையதாக இருக்கும் என நம்பப்படுகிறது. மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளை விசேட அதிரடிப்படையினர் எடுத்து சென்றுள்ள நிலையில் விசாரணைகளின் பின்னர் மேலதிக விசாரணைகளிற்காகவும், நடவடிக்கைக்காகவும் பூநகரி பொலிசாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும், மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...