பேரன்பு காட்டிய பாட் கம்மின்ஸ் | 37 லட்சம் இந்திய ரூபாய் நன்கொடை

Date:

கொரோனா இரண்டவாது அலையின் தாக்கத்தில் இந்தியா திணறி வரும் சூழ்நிலையில் ஐ.பி.எல் போட்டியில் விளையாடி வரும் பாட் கம்மின்ஸ் பி.எம். கேர்ஸ் நிதிக்கு 37 லட்ச இந்திய ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்தியாவில் இந்த ஆண்டு ஐபில் போட்டிகள் மும்பை, சென்னை ஆகிய மாநிலங்களில் நடந்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக பயோ பபுள் முறையில் வீரர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும் போட்டிகளை நேரில் கண்டுகளிக்க ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் தகுந்த பாதுகாப்புடன் ஐபிஎல் போட்டிகளும் நடைபெற்று வருகின்றன.

அதே நேரத்தில் தற்போது இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பேரலையாக உருமாறி மக்களை தாக்கி வருகிறது. நாள்தோறும் கொரொனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதே போல் தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மக்கள் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக தவித்து வருகின்றனர். மேலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக நாடு முழுவதும் கொரோனா நோயாளிகள் பல பேர் இறந்துவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல்கள் அனைத்தும் உலக நாடுகளை இந்தியாவின் பக்கம் கவனத்தை திரும்ப செய்துள்ளன. பிரிட்டன், சிங்கப்பூர், அமெரிக்கா உட்பட பல நாடுகளும் இந்தியாவிற்கு தேவையான ஆக்ஸிஜன், தடுப்பூசி போன்ற உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களை அனுப்பி வருகின்றன. இந்த நிலையில் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா வீரர் பாட் கம்மின்ஸ், இந்தியாவின் துயரத்தை உணர்ந்து பி.எம். கேர்ஸ் நிதிக்கு 37 லட்ச ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட அறிக்கையில், “ இந்தியா எனது அன்பிற்குரிய நாடு. நான் பார்த்ததிலேயே இங்குதான் மக்கள் பலரும் கனிவாகவும், அன்புடனும் நடந்து கொள்கின்றனர். தற்போது இந்தியாவில் பரவி வரும் கொரோனாவால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே நாட்டில் நிலவும் இந்த துயரம் நிறைந்த இந்த சூழலை கருத்தில் கொண்டு பிரதமரின் கொரோனா நிவாரண நிதியுதவி திட்டத்திற்கு 37 லட்சம் வழங்குகிறேன். மேலும் தொடரில் கலந்து கொண்டுள்ள மற்ற வீரர்கள் அனைவரும் தங்கள் பங்களிப்பை பி.எம்.கேர்ஸ் நிதிக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இந்த அசாதரணமான சூழ்நிலையில், ஐபிஎல் போட்டிகள் நடைபெற வேண்டுமா என்று கேள்வி எழுந்து வருகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த பாட் கம்மின்ஸின் உதவி மற்ற வீரர்களுக்கும் நல்ல ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...