யாழ் மாவட்டத்தில் அனைத்து திரையரங்குகளும் மறு அறிவித்தல் வரை பூட்டு

Date:

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அனைத்து திரையரங்குகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தீவிரமாக உள்ள நிலையில் தனியார் கல்வி நிலையங்கள், திருமண மண்டபங்கள் தடை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எனினும் திரையரங்குகளை மூடவில்லை என்று எமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அது தொடர்பில் ஆராயப்பட்டது.

அதனால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மறு அறிவித்தல்வரை மூடப்படுகின்றன” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

க.பொ.த உயர்தரப் பரீட்சையையொட்டி விசேட போக்குவரத்து சேவைகள்.

க.பொ.த உயர்தரப் பரீட்சையையொட்டி  விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பரீட்சைக்காலங்களில் மாணவர்கள் மற்றும்...

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 1818 தொலைபேசி இலக்கத்துக்கு 800 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாகத் தகவல் வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 1818 தொலைபேசி இலக்கத்துக்கு...

புதுப்பிக்கப்படும் அஸ்வெசும தகவல்கள்!

அஸ்வெசும வருடாந்த தகவல்களை புதுப்பிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி சபை தெரிவித்துள்ளது. 2023ம்...