இலங்கையில் தேசிய ரீதியில் இயங்குகின்ற மிகமுக்கியமான சமூக சேவை நிறுவனமான வை. எம். ஏ (YMMA) நாடளாவிய ரீதியில் நீண்டகாலமாக பல்வேறு சமூகப் பணிகளை இன, மத ,மொழி வேறுபாடின்றி மேற்கொண்டு வரும் ஒரு தொண்டு நிறுவனமாகும்.எனவே இந்த அடிப்படையில் மற்றுமொரு பொதுச் சேவை கட்டமாக தேசிய ரீதியில் நீர் விநியோகத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது
புத்தளம் மாவட்டத்தில் அனைத்து இலங்கை வை . எம்.ஏ (YMMA) அமைப்பின் அனுசரணையில் நாடு முழுவதும் நீர் விநியோகத் திட்டத்தின் ஆரம்ப கட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
கற்பிட்டிய பிரதேச செயலாளரினால் பரிந்துரைக்கப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களின் வீடுகளை வை.எம்.ஏ(YMMA) வின் தெரிவிக்குழு பார்வையிட்டது.இந்த மாநாட்டின் (YMMA) தேசியத் தலைவரான கே .என் டீன் பொருத்தமானவர்களை தெரிவு செய்வதற்காக புத்தளத்திற்கு விஜயம் செய்தார்.அத்தோடு இந்த திட்டம் வை.எம்.ஏ வின் (YMMA) ரமலான் மாதத்திற்கான விசேட திட்டங்களில் ஒன்றாகும் .இந் நிகழ்வின் போது புத்தளம் மாவட்டத்தின் வை.எம்.ஏ (YMMA) தலைவர் முஜாஹித் நிசார் குறித்த பயனாளர்களுக்கான நிதியை வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பாடசாலை அதிபர் என்.ஆர் . எம்.எம் முஹ்சி, வை.எம்.ஏ (YMMA) கற்பிட்டியின் தலைவர் இர்பான் ரிஸ்வான் ,மேம்பாட்டு அலுவலகர் ஜின்னா அஸ்மியா மற்றும் பள்ளிu நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.