`ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மட்டும் அனுமதிக்கலாம்’ – இந்திய அனைத்துக்கட்சி கூட்டத்தில் கட்சிகள் கருத்து?

Date:

`ஆக்ஸிஜன் உற்பத்திக்கு மட்டும் அனுமதிக்கலாம்?!’

ஆக்ஸிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமா என்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், திமுக, காங்கிரஸ், பா.ஜ.க, பாமக, தேமுதிக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். திமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள், `தேவையை கருத்தில் கொண்டு ஆக்ஸிஜன் உற்பத்திக்கு மட்டும், தமிழக அரசின் உச்சகட்ட கண்காணிப்பில் அனுமதி அளிக்கலாம்’ என கருத்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆக்ஸிஜன் உற்பத்தி தவிர அங்கு வேறு என்ற பணிகளும் நடக்க கூடாது எனவும் பெரும்பாலான கட்சிகள் கருத்து தெரிவித்துள்லதாகவும் தகவல்!

இந்தியாவுக்கு உதவும் கூகுள், மைக்ரோசாஃப்ட்!

“இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருக்கிறது. கூகுள் நிறுவனமும், நிறுவன ஊழியர்களும் இந்தியாவுக்கு ரூ.135 கோடி மதிப்பிலான உதவிகளை வழங்க இருக்கிறோம்” என்றார் சுந்தர் பிச்சை

மேலும், மைக்ரோசாஃப்ட் நிறுவன சி.இ.ஓ சத்யா நாதெள்ளா, “இந்தியாவின் தற்போதைய சூழ்நிலையால் மனம் உடைந்துள்ளேன். அமெரிக்க அரசு இந்தியாவுக்கு உதவ முன்வந்ததற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மைக்ரோசாஃப்ட் தனது குரல், வளங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை நிவாரண முயற்சிகளுக்கு உதவுவதற்கும், முக்கியமான ஆக்ஸிஜன் செறிவு சாதனங்களை வாங்குவதற்கும் தொடர்ந்து பயன்படுத்தும்” என்றார்.

இந்தியாவில் கொரோனா நிலவரம்…!

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் புதிதாக 3,52,991 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 1,73,13,163 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2812 . இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,95,123 -ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 1,43,04,382-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 28,13,658 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 14,19,11,223 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

நன்றி விகடன்

 

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...