ஆக்ஸிஜன் வழங்குவதில் பிரச்னை | 4 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு! | மகாராஷ்டிராவில் தொடரும் சோகம்

Date:

ஆக்ஸிஜன் சப்ளையில் பிரச்னை ஏற்பட்டு மும்பை அருகில் உள்ள தானேயில் 4 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்

மும்பை அருகே உள்ள விராரில், இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டு 13 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். இதே போன்று நாசிக் மாநகராட்சி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் கசிவு ஏற்பட்டு 24 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் மும்பை அருகில் உள்ள தானே வர்த்தக் நகரில் இருக்கும் வேதாந்த் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சப்ளையில் பிரச்னை ஏற்பட்டு 4 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் இது குறித்து விசாரிக்க கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்த செய்தி கேள்விப்பட்டதும் அரசியல் தலைவர்கள் இம்மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டனர். அதோடு நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வெளியில் போராட்டம் நடத்தினர். இதனிடையே 6 பேர் இறந்திருப்பதாக பாஜக தலைவர்களில் ஒருவரான கிரீத் சோமையா குற்றம் சாட்டியுள்ளார். “தாக்கரே ஆட்சியில் தீ விபத்துக்களாலும், ஆக்ஸிஜன் பற்றாக்குறையாலும் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். அப்படி இருந்தும் ஏன் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபேயை பதவிநீக்கம் செய்யவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையே மும்பையில் கொரோனாவை கட்டுப்படுத்த கொரோனா நோயாளிகள் இருக்கும் கட்டடத்திற்கு வெளியில் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 5 கொரோனா நோயாளிகள் ஒரு கட்டடத்தில் இருந்தால் அக்கட்டிடம் சீல் வைக்கப்படும். அது போன்ற கட்டடங்களில் சிறப்பு போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்புக்கு போடப்பட்டுள்ளனர். கொரோனா விதிகளை யாரும் மீறிவிடக்கூடாது என்பதற்காக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று மும்பை போலீஸ் செய்தி தொடர்பாளர் சைதன்யா தெரிவித்தார்.

1100 சிறப்பு போலீஸ் அதிகாரிகள் இது போன்று சீல் வைக்கப்பட்ட கட்டடங்களுக்கு வெளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். கடுமையான கட்டுப்பாடு காரணமாகவே மும்பையில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் சற்று குறையத்தொடங்கி இருக்கிறது. அதே சமயம் இது போன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மேலும் 3 போலீஸார் மும்பையில் உயிரிழந்துள்ளனர். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க குஜராத்தில் இருந்து ரயில் மூலம் 3 டேங்கர்களில் ஆக்ஸிஜன் மும்பைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஒவ்வொரு டேங்கரிலும் தலா 15 டன் அளவு கொண்டது ஆகும். இது குஜராத்தில் உள்ள ஹாபா என்ற இடத்தில் இருந்து ரயில் மூலம் கொண்டு வரப்பட்டது. டேங்கர் லாரி ரயிலில் ஏற்றப்பட்டு ரயிலில் கொண்டு வரப்பட்டது. இதனை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. ஏற்கனவே விசாகப்பட்டினத்தில் இருந்து ரயில் மூலம் ஆக்ஸிஜன் மகாராஷ்டிராவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...