இந்தியாவில் தற்போது பரவி வரும் வைரஸ் இலங்கையில் பரவுவதற்கான எந்த சான்றுகளும் இல்லை-வைத்தியர் சந்திமா ஜீவந்தரா தெரிவிப்பு!

Date:

இந்தியாவில் உருமாற்ற வீரியம் கொண்ட கொவிட் வைரஸ் பரவுவதற்கான சான்றுகள் இருந்தாலும் இலங்கையில் அந்த வைரஸ் பரவுவதற்கான இதுவரை எந்த உறுதியான ஆதாரங்களும் இல்லையென நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு நிபுணத்துவ வைத்தியர் சந்திமா ஜீவந்தரா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரங்களில் முழுமையான மரபணு பரிசோதனைகளை மேற்கொள்ள இருப்பதாகவும் இதன் மூலம் நாட்டின் வைரஸ் பரவலின் சரியான கணிப்பை எடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டில் பரவிவருகின்ற வைரஸ் புதிய மாறுபாடாக கூட உருமாறலாம் என்று ஆரம்ப கட்ட கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்துகின்றன.பண்டிகை காலத்திற்குப் பிறகு கொழும்பு, குருநாகல் மற்றும் கண்டியில் இணங்காணப்பட்ட தொற்றாளர்களிலிருந்து நாம் இதனை கணித்திருக்கிறோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும் மக்கள் சுகாதார வழிகாட்டல்களை ‌பின்பற்றும் போது வைரஸின் பரவலை கண்டிப்பாக தடுக்க முடியும் எனவும் வைரஸ் பரவலின் சரியான கணிப்பு வெளியாகும் வரை இரண்டு மீட்டர் தூரத்தை பேணுமாறும் மக்களுக்கு அறிவுறுத்துகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...