இன்றைய வானிலை அறிவிப்பு

Date:

மேல், சப்ரகமுவமற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 50மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதி வரை இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. இன்று(07ஆம் திகதி) கொழும்பு, மல்வானை, கொஸ்கம, சீதாவக்க, மல்தெனிய, ரொசெல்ல, தலவாக்கலை, சீதா எலிய, எட்டம்பிட்டி, பசறை, வரலந்த மற்றும் பலாடி களப்பு வெவ ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.13 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

(வளிமண்டலவியல் திணைக்களம்)

Popular

More like this
Related

மாற்றியமைக்கப்பட்ட வாகனப் பதிவு எண்களை பயன்படுத்துவோருக்கு கடும் எச்சரிக்கை!

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வழங்கப்படும் வழக்கமான வாகனப் பதிவு இலக்கங்களுக்குப் பதிலாக,...

மீண்டும் கொழும்பு வர விசேட போக்குவரத்து சேவை

புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் கொழும்புக்கு திரும்புவதை முன்னிட்டு...

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை...

6 நாட்களில் ஒரு பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டிய இலங்கை போக்குவரத்துச் சபை

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட விசேட பேருந்து...