மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜனை வழங்கும் இரு நிறுவனங்களும் அடுத்த ஆறு மாதங்களுக்கு போதுமான அளவு ஆக்ஸிஜனை வழங்க முடியும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த இரண்டு நிறுவனங்களிடம் எவ்வளவு ஆக்ஸிஜன் இருக்கின்றது என்பதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
மருத்துவமனைகளில் கிடைக்கும் ஆக்ஸிஜனின் திறன் குறித்து தங்களுக்கு விரைவில் தகவல் தெரிவிக்குமாறும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனைத்து மருத்துவமனைகளின் இயக்குநர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.அத்தோடு , கொவிட் 19 நாட்டில் வேகமாக பரவுவதால் அவசர காலங்களில் ஆக்ஸிஜனை வழங்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலும் அவர் குறிப்பிட்டார்.