இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங் (Wei Fenghe) தனது பயணத்தை நிறைவு செய்துகொண்டு நாட்டை விட்டு வௌியேறியுள்ளார்.
இந்த விடயத்தினை தென்னிலங்கை ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இரண்டு நாள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு கடந்த 27ஆம் திகதி இரவு அவர் இலங்கையை வந்தடைந்தார். இதயைடுத்து அவர் நேற்றைய தினம் ஜனாதிபதி மற்றும் பிரமருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவை சந்தித்த அவர், குறித்த சந்திப்பின் ஊடாக இரு நாட்டிற்கும் இடையிலான தொடர்பு மேலும் வலுப்பெற்றதாக தெரிவித்திருந்தார்.
கொரோனா வைரஸ் பரவலின் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இரண்டாவது சிரேஷ்ட அதிகாரி இவர் ஆவார். இதற்கு முன்னர் கடந்த ஒக்டோபரில் சீனாவின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் யாங் ஜீச்சி நாட்டுக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது