ஈராக்கின் பக்தாத் நகரில் கொவிட் 19 மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெடித்ததால் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கொவிட் 19 நோயாளிகளில் 27 பேர் மரணமடைந்துள்ளதோடு 46பேர் காயமடைந்துள்ளனர்.எனவே இதன் பின்னர் உயர்மட்ட அதிகாரிகளின் மீது வழக்குத் தொடர வேண்டுமென பொதுமக்கள் கோரி வருகின்றனர்.
ஈராக் தலைநகரில் உள்ள இப்னுல் காதிப் மருத்துவமனையே இன்று (25)இவ்வாறு தீக்கரையாக்கப்பட்டுள்ளது.மருத்துவமனையில் தீ அணைப்பு நடவடிக்கைகள் இல்லையென்றும் இதனாலே இவற்றை கட்டுப்படுத்த முடியாமல் போனதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொவிட் 19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஒதுக்கப்பட்ட பிரிவுகள் அனைத்திலும் தீ விரைவாக பரவியதால் ஜன்னல்களிலிருந்து மக்கள் குதித்ததை அவதானித்த ஒருவர் அல் ஜெஸீரா செய்திப் பிரிவிற்கு கருத்துத் தெரிவித்தார்.” ஆரம்பத்தில் ஏற்பட்ட வெடிப்பின் போது மக்கள் இதனை கண்டு வெளியே குதித்தனர் , சிலபேர் மருத்துவர்களின் கார்களின் மீதும் விழுந்தார்கள்.இதில் 120 நோயாளிகள் மற்றும் 90 பொதுமக்கள் மீட்கப்பட்டதாக ஈராக்கின் ஜ.என்.ஏ செய்தி வெளியிட்டது.
இது போன்ற சம்பவம் அலட்சியப் போக்கினாலேயே இடம்பெற்றுள்ளது எனவே இது தொடர்பாக உடனடியாக விசாரணைகளை தொடங்க வேண்டும் என்றும், மருத்துவமனை அதிகாரிகள் இதில் தடுத்து வைக்கப்பட வேண்டும் என ஈராக் பிரதமர் முஸ்தபா அல் காதிமி உத்தரவிட்டுள்ளார்.
ஈராக்கின் சுகாதார அமைப்பு பல தசாப்தங்களாக பொருளாதாரத் தடைகள் மற்றும் புறக்கணிப்பு ஆகியவற்றால் மோசமடைந்திருந்தது.எனவே இந்த நிகழ்வினால் மேலும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளமை கவலைக்கிடமானது.காயமடைந்தவர்களில் பலருக்கு கடுமையான தீக்காயங்கள் இருப்பதால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மருத்துவமனையில் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடிய காணொலிகள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.இந்த வெடிப்பினால் பலர் உயிரிழந்துள்ளதோடு பலர் புகைமூட்டத்தால் மூச்சுத் திணறடிக்குள் சிக்காகியிருந்தனர் என்று சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.தீ விபத்தின் பின்னர் பல மணிநேரங்களுக்கு எந்த அறிக்கையும் வெளியிடாத சுகாதார அமைச்சு ,200ற்கும் மேற்பட்ட நோயாளிகள் காப்பற்றப்பட்டதாகவும் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை வெளியாக்கினர்.
சுகாதார அமைச்சர் ஹசன் அல் தமீமியை நீக்கிவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் ஹேஷ்டேக் பதிவிட்டு ட்விட்டரில் வைரலாகியுள்ளது.எனவே அல் காதிமி மூன்று நாட்கள் தேசிய துக்க தினமாக அறிவித்துள்ளார்.
பக்தாத் ஆளுனர் முஹம்மத் ஜாபர் சுகாதார அமைச்சில் யார் யாரெல்லாம் அவர்களுடைய வேலைகளை முறையாக செய்யத்தவறியவர்களுக்கு விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,217 ,இறப்புக்கள் 102,528 ஆக எண்ணிக்கை நேற்று (24) பதியப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈராக் கடந்த மாதம் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது.கிட்டத்தட்ட 650,000 பேர் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.கொவிட் தொற்றின் ஆரம்பத்திலிருந்து மக்கள் முகக்கவசம் அணியவும், தடுப்பூசிகளை ஏற்றவும் பின்வாங்கினார்கள் எனினும் அரசின் விழிப்புணர்வின் பிற்பாடே மக்கள் ஆர்வம் காட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.