உடன் அமுலுக்கு வரும் வகையில் பாஃம் எண்ணெய் இறக்குமதிக்கு தடை

Date:

உடன் அமுலுக்குவரும் வகையில் பாஃம் எண்ணெய் இறக்குமதிக்கு முழுமையாக தடை விதிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தீர்மானித்துள்ளார்.
இந்த தடையுத்தரவிற்கான வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு அமைய, இன்றைய தினத்தில் வெளியிடப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள பாஃம் எண்ணெய்யை, விநியோகிக்க சுங்கத் திணைக்களத்திற்கு ஜனாதிபதி தடை விதித்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, முள் தேங்காய் பயிரிடும் நடவடிக்கைகளுக்கும் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் முள் தேங்காய் பயிர் செய்கையை படிப்படியாக நிறுத்துமாறு 6 மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

முள் தேங்காய் மற்றும் பாஃம் எண்ணெய் பயன்பாட்டை முழுமையாக நிறுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகின்றது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...