ஊரடங்கு தொடர்பில் வெளியிட்ட அறிவிப்பு | இராணுவத் தளபதி சவேந்திர சில்வா

Date:

நாட்டில் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும், பொது மக்கள் கொரோனா பரவாமல் தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொரோனா நிலைமை குறித்து விவாதிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடைலை அடுத்து தற்போது இடம்பெறும் ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கை மக்கள் மிகவும் புத்திகூர்மையுடையவர்கள். ஆகவே கொரோனா பரவாமல் தம்மை தாமே பாதுகாத்துக்கொள்ள அவர்களுக்கு தெரியும். அவர்கள் அதை செய்வார்கள் என நாம் நம்புகின்றோம்.

நாடளாவிய ரீதியில் பல இடங்களில் புத்தாண்டுக்குப் பின் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில் பயணக்கட்டுப்பாடுகள், ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா என்ற செய்தி பரவலாக வெளியாகி உள்ளது.

எனினும் இலங்கை மக்களை மீண்டும் அவ்வாறான நிலைக்கு கொண்டுசெல்ல நாம் தயாரில்லை.

ஆகவே வார இறுதி நாட்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது. எனினும் அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு பொது மக்களிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.

Popular

More like this
Related

‘குர்ஆனின் வழியில் கருணை காட்டுங்கள்’; அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக அலி சப்ரி குரல்

நபிகள் நாயகத்தின் கண்ணியத்தைப் பாதுகாப்பதைப் பற்றி பேசும் போதெல்லாம், அவரது கருணை,...

இரட்டையையாளர்களான மருத்துவத் துறை மாணிவிகள் இருவருக்கு ஐபேட் வழங்கி வைப்பு.

உலக முஸ்லிம் சமேலனம் (ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமி) – இலங்கை அலுவலகத்தின்...

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்கான தீவிர முயற்சி!

சவூதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை...

அனோஜன் வழக்கை உன்னிப்பாக அவதானிக்கும் இலங்கை அரசு!

சவூதி அரேபியாவில் தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான அனோஜன்...