கறுப்பு சந்தையில் ஏலத்தில் விற்கப்படும் இறுதி மூச்சு

Date:

இந்தியா ஏன் இந்த நிலைக்கு தள்ளப்பட்டது என்ற கேள்வி எல்லா திசைகளில் இருந்தும் வருகின்றன.
தன் அன்புக்குரியவர் வீதி ஓரத்திலும், மருத்துவமனை வாசல் படியிலும், சுவாசிக்க ஆக்சிஜன் இன்றி கண் முன்னே துடித்து சாகும் துயரங்களை விவரிக்கும் உறவுகளின் கண்ணீர் கதைகள் சமூக ஊடகங்களில் நிரம்பி வழிகின்றன.

தனது தாய் தந்தைக்கு, மனைவிக்கு அல்லது கணவனுக்கு சுவாசிப்பதர்க்கான மருத்துவ ஆக்சிஜனை பெற்றுக்கொடுப்பது, வைத்திசாலையில் ஒரு கட்டிலையோ அல்லது நிலத்தில் ஒரு இடத்தையோ பெற்றுக்கொள்வது , ஒரு மருத்துவரின் கவனத்தை பெறுவது என்பதெல்லாம் சராசரி மனிதனுக்கு எட்டாத விடயங்களாக மாறும் அளவுக்கு இந்திய வல்லரசு வளர்ச்சி அடைந்துள்ளது..!

அரச மருத்துவமனைகளை சிதையவிட்டு, ஆயிரக்கணக்காக கோடிகளை செலவு செய்து கோயில் கட்டும் ஒருநாட்டில் , மத வாதத்தையும் போலி தேசியவாதத்தையும் பரப்பி யதார்த்ததை மறக்கவைத்து மக்களை மேய்க்கும் ஆட்சியாளர்கள் இருக்கும் ஒரு நாட்டில் இதை விட வேறென்ன எதிர்பார்க்க முடியும்.

இந்தியா உலக மருந்து உற்பத்தியில், மருத்துவ மூலபொருற்கள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதல் இடத்தில் இருக்குறது. மருத்துவ தொழில் துறையில் இந்தியா “உலகத்தின் பார்மசி” என்று அழைக்கப்படும் நாடு. இப்போதும் அந்த உற்பத்திகள் அங்கு தொடரத்தான் செய்கின்றன ஆனால் அவை செல்வந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அந்த மருந்துகளும் ஆக்சிஜனும் மேற்கு நாடுகளுக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் விற்கப்படும் அதேவேளை உள்ளூர் மக்கள் வீதிகளில் செத்து மடிகிறார்கள்.

இந்தியா உலகில் அதிக செருப்புக்களையும் தோள் பொருட்களையும் தயாரிக்கும் நாடு ஆனால் உலகில் அதிகமானோர் செருப்பு வாங்க வழியில்லாமல் வெறும் காலோடு நடக்கும் நாடும் இந்தியாதான் என்று ஒரு குறிப்பில் வாசித்த நினைவிருக்கிறது- மருந்தின் நிலையும் அதுதான்.

உயிர்காக்கும் மருந்துகளை தனியார் நிறுவனங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விற்றுவிட்டு உள்ளூரில் சாதாரண மக்களுக்கு மாட்டு மூத்திரம் குடித்து நோயை குணப்படுத்துமாறு போதிக்கப்படுகிறது.

மனிதனின் ஒவ்வொரு அடிப்படை தேவையும், மருத்துவமும் கல்வியும் விற்பனை பொருளாக்கப்பட்டு அவை என்ன விலையில் யாருக்கு கிடைக்கவேண்டும் என்ற முடிவுகள் அரசாங்கம் என்று பேரில் அம்பானிகளாலும் அதானிகளாலும் எடுக்கப்படும் ஒரு நாட்டில் சராசரி மனிதனின் முடிவு இதைவிட வேறு எப்படி இருக்கும் என்று எதிர்பார்க்க முடியும்.

இப்படியான அனர்தமும் மனித அவலமும் வரும் என்பது ஒன்றும் தெரியாத விடயம் அல்ல, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தோ மருத்துவ வசதிகளை மேன்படுத்துவது குறித்தோ பேசுவதர்க்கு பதிலாக, பண முதலைகளின் கைக்கூலி ஊடகங்கள் IPL போன்ற சூதாட்டங்களில் மக்களுக்கு ஒரு தற்காலிக கேளிக்கை கிளுகிளுப்பை வழங்கி யதார்த்தில் இருந்து அவர்களை திசைதிருப்பும் வேலையை கச்சிதமாக செய்து முடிகின்றன.

கடந்த நாட்களில் ஏராளமான சினிமா விருது வழங்கும் நிகழ்வுகளை பார்க்க முடிந்தது. முன்னணி நட்சத்திரங்கள் முக கவசம் கூடம் இல்லாமல் அருகருகே நின்று கைகுலுக்கி கொளவ்தும் பின்னணியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆர்பரிப்பதையும் பார்க்கிறோம். இவை எல்லாம் இங்கேதான் மக்களை கொண்டுவந்து சேர்க்கும் என்பது இவர்களுக்கு தெரியாது அல்ல.

விஞ்சானத்துக்கு பதிலாக மூடநம்பிக்கையை விதைத்து சமூகத்தை வழிநடத்தும் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில், வாழ்வின் எல்லா நிலையையும் பணம் மட்டுமே முடிவு செய்யும் விதத்திலான ஒரு அநீதிமிக்க சந்தை பொருளாதாரம் நிறுவப்பட்டுள்ள நாடுகளில் வாழும் மக்களுக்கு இந்த பெரும் தொற்று ஏராளமான பாடங்களை கற்று தரும் எனபதில் சந்தேகம் இல்லை. இந்த அமைப்பு முறையில் ஒரு கிளர்ச்சி மிக்க மாற்றம் ஏற்படாதவரை இந்த துயரங்கள் அதிகரிக்குமே தவிர குறையப்போவதில்லை.

முகநூலில் இருந்து

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...