கொவிட்டின் இரண்டாவது அலையில் சிக்கித் தவிக்கும் இந்தியா!

Date:

கொவிட் நோய்த் தொற்று காரணமாக இந்தியாவின் டெல்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணத்தை தழுவி வருவதாக குறித்த மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கடந்த மூன்று நாட்களில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் தொற்றாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதோடு , சனிக்கிழமையன்று ஒரே இரவில் 346,786 தொற்றாளர்கள் மேலும் அதிகரித்துள்ளனர்.நேற்று இரவு (23) டெல்லி ரோஹினி பகுதியில் இருக்கும் ஜெய்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடான நிலையில் இருபது நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த செய்தியை பி.டி.ஐ செய்தி முகாமை அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொவிட்டினால் உயிரிழக்கின்றவர்களின் எண்ணிக்கை 24 மணித்தியாலத்திற்குள் 2,624ஆக அதிகரித்துள்ளது.இது வெள்ளிக்கிழமை 2,263 ஆக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் இந்த நிலைமை “பேரழிவு தந்த நினைவூட்டல்” என்று உலக சுகாதார அமைப்பு (Who) தெரிவித்துள்ளது.

கொவிட் தொற்றின் ‌முதலாவது கட்டத்தில் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்ட போதிலும் இந்த வருடத்தின் ‌ஆரம்பத்தில் இந்த வைரசை கட்டுப்படுத்த முடியும் என நம்பியிருந்தனர் . பெப்ரவரி நடுப்பகுதியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 11,000ஆக குறைவடைந்தது . அத்தோடு இந்தியா தடுப்பூசிகளையும் ஏற்றுமதி செய்து வருகின்றது.கொவிட் தொற்றின் இறுதிக் கட்டத்தில் இந்தியா இருப்பதாக இந்தியாவின் சுகாதார அமைச்சர் கடந்த மார்ச் மாதத்தில் குறிப்பிட்டிருந்தார்.எனினும் தற்பொழுது இந்தியா கொவிட்டின் இரண்டாவது அலையில் சிக்கியதோடு , ஆக்சிஜன் பற்றாக்குறையையும் கொண்டுள்ளது என்பது சிந்திக்க வைக்கின்றது.இருப்பினும் இந்த மாதத்தின் தொடக்கத்தில் கும்பமேளா திருவிழா கூட்டங்களில் பல மில்லியன் கணக்கான யாத்திரிகர்கள் கூடியிருந்தனர் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது.

டெல்லியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பதால் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகள் நிரம்பியுள்ளதாகவும், படுக்கைகளுக்கு பற்றாக்குறை நிலவியுள்ளது.கிட்டத்தட்ட ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் தீர்ந்துவிட்டால் எஞ்சியுள்ள நோயாளிகளுக்கு எந்த விதமான மாற்றுயீடும் இல்லை என்று வைத்தியர் சுமித் ரே குறிப்பிட்டுள்ளார்.எனினும் சில நிமிடங்களில் இறந்து போகின்ற நோயாளிகளும் இருக்கின்றார்கள் அவர்கள் வென்டிலேட்டர்களில் இருப்பவர்கள்.அவர்களுக்கு அதிக சக்தி வாய்ந்த ஆக்சிஜன் தேவைப்படுகிறது.ஆக்சிஜன் நிறுத்தப்பட்டால் அவர்களில் பெரும்பாலானோர் இறந்து விடுகின்றனர்.

ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் 3.6 டொன் ஆக்சிஜனை அரசு ஒதுக்கியுள்ளதாக கூறியிருந்தார்.எனினும் அவற்றில் ஒரு பகுதி மாத்திரமே நள்ளிரவு அனுப்பி வைத்திருந்ததாகவும் பிபிசி செய்தி தளத்திடம் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஆக்சிஜனை வழங்குமாறும் , நாட்டின் அனைத்து ஆக்சிஜன் ஆலைகளும் உடனடியாக இராணுவம் மூலம் அரசாங்காத்தால் கையகப்படுத்தப்பட வேண்டும் எனவும் ரொய்ட்டர் செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...