ரியாதில் வழிபாட்டாளர்களிடையே கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் வழிகாட்டல் அமைச்சு 18 பள்ளிவாசல்களை தற்காலிகமாக மூடியுள்ளதாக சவூதி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த காலங்களில் ரியாதில் 11 பள்ளிவாசல்கள் மூடப்பட்டிருந்தது.அதில் மூன்று கிழக்கு மாகாணத்திலும் பஹா மற்றும் ஆசிரிலும் தலா இரண்டு பள்ளிவாசல்கள் மூடப்பட்டன.
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த 75 நாட்களில் 782 பள்ளிவாசல்களை தற்காலிகமாக மூடுவதற்கு வழிவகுத்தது.எனினும் 725 பள்ளிவாசல்கள் சுத்திகரிப்பு நடவடிக்கைகளின் பிற்பாடு மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.அதில் ரியாத் , காசிம், மக்கா,தபூக்,பஹா, கிழக்கு மாகாணம்,ஆசிர் மற்றும் வடக்கு எல்லைகள் 24 பள்ளிவாசல்கள் சுத்திகரிப்பு மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடர்ந்து செயல்படுவார்கள் என சவூதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.