கோத்தபாய அரசு மக்களை‌ பாதுகாக்க எதுவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை | ராஜித்த சேனாரத்ன குற்றச்சாட்டு!

Date:

கொவிட்டின் இரண்டாம் அலை ஆபாத்தான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந் நிலையில் இதன் பரவல் இலங்கையிலும் மிக வேகமாக பரவிவருகிறது.இலங்கை மருத்துவர் சங்கம் அண்மையில் சுட்டிக்காட்டியது போல் மேலும் மூன்று வாரங்கள் நாட்டிற்கு பாரிய சவாலாக அமையும் .இதற்கு மத்தியில் இன்றும் நாட்டின் பல பகுதிகளில் கொவிட் பரவல் தீவிரமாக இருக்கின்றது.பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.இணங்காணப்பட்ட மாகாணங்களில் பாடசாலைகளும் மூடப்படப்பட்டுள்ளன.

தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் மூன்றாம் அலை தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாட ஜனாதிபதியிடம் அனுமதி கோரி கடந்த 22 ஆம் திகதி மருத்துவர் சங்கம் ஜனாதிபதிக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளதாகவும் இதுவரை எந்தப் பதில்களும் கிடைக்ப்பெறவில்லை என்றும் மருத்துவ சங்க அதிகாரிகள் கூறுகின்றனர். இவர்களுடன் கலந்துரையாடாமல் ஜனாதிபதி தனி சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஆபத்து குறித்து ஜனாதிபதி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை, ஆனால் மருத்துவ சமூகம் பரவலாக கொவிட் பரவுவதாகவும், ஆக்சிஜன் தேவைப்படுவதாகவும், அவசர அறை நோயாளிகளால் நிரம்பியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளனர்.இந்தியாவிலும் இது தான் இடம் பெற்றது.மருத்துவ மனைகளில் போதிய அவசர நிலைமை கட்டில்கள் அதற்கான ஏற்பாடுகள் இன்மையாலும் அதற்கான ஏற்பாடுகளில் கவனம் செலுத்தாமையினாலுமே இன்றைய நிலை ஏற்ப்பட்டுள்ளது.நாங்களும் முன்னாயத்த செயற்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும்.

இங்கே முக்கியமான விடயம் என்னவென்றால், இந்த வைரஸின் அறிகுறிகளைக் வெளிக்காட்டவில்லை. இது நேரடியாக நிமோனியாவை ஏற்படுத்துகிறது. இது இதுவரை ஆபத்தான நிலையை கொண்டு சென்றுள்ளது.
எமது நல்லாட்சி காலத்திற்குப் பிறகு சுகாதார அமைச்சகம் எந்த வென்டிலேட்டரையும் இறக்குமதி செய்யவில்லை. இந்த கொவிட்டிற்காக மாவட்ட அளவில் வேறாக்கப்பட்ட மருத்துவமனைகள் இருக்க வேண்டும். அனுராதபுர மாவட்டத்தில் ஒரு தனி கொவிட் மருத்துவமனை உள்ளது, ஆனால் அது போதுமானதாக இல்லை.வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டனவே. மிகப்பெரிய மாவட்டமான கம்பஹா மாவட்டத்திற்கு தனி கொவிட் மருத்துவமனை வழங்கப்படவில்லை.இந்த அரசாங்கம் இப்போது வசதிகளை வழங்கி வைத்தியசாலைகளை ஆயத்தப்படுத்த வேண்டும்.

உலக சுகாதார அமைப்பு (WHO) மருத்துவ உபகரணங்களையும் இலவச தடுப்பூசிகள் தொகையையும் வழங்குவதாக இருந்தாலும், அது இன்னும் வாங்கப்படவில்லை. இப்போது மூன்று மாதங்கள் ஆகின்றன. இந்த அரசாங்கம் எந்த இரண்டாம் கட்ட தடுப்பூசிகளையும் வாங்கவில்லை. ‘சுவசரிய’ அறிமுகப்படுத்தப்பட்டபோது கூச்சலிட்ட GMO, நாங்கள் கொரோனாவுக்கு தடுப்பூசி விடயத்தில் மௌனிகளாக இருக்கின்றனர்.தடுப்பூசி தன் தீர்வு என்றும், முதல் அலையில் 1.2 மில்லியன் தடுப்பூசிகள் மட்டுமே பெறப்பட்டன, அது போதாது, ”என்று அவர் ராஜித சேனாரத்ன கூறினார்.

அரசாங்கம் இன்று அடக்குமுறையை மேற்கொண்டு வருகிறது.ரிஷாத் பதியுதீன், அசாத் சாலி போன்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹரின் மற்றும் மனுஷவை கைது செய்ய முற்படுகின்றனர்.அடக்குமுறையை நோக்கி ஒரு தலைபட்சமான தீர்வுகளை நோக்கி இப்போது உலகில் எந்த நாடும் இல்லை என்று கூறினார்.

இக்கட்டான கொவிட் நிலையை தேற்கடிக்க எதிர்க்கட்சிகளினதும் ஆலோசைகளைப் பெற்று நாட்டைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என்றும் சர்வகட்சிக் குழுவைக் கூட்டி பொதுவாக இதைத் தோற்கடிக்கும் நடவடிக்கைகளில் ஜனாதிபதி உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இன்று(27) எதிர்க் கட்சித்
தலைவர் அலுவலகத்தில் இடம்
பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...