மதுபோதையில் வாகனம் செலுத்தும் வாகன சாரதிகளை கைது செய்வதற்கான விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதன்படி, இன்று (18) நண்பகல் 12 மணி முதல் நாளை (19) காலை 06 மணி வரை இந்த விசேட சுற்றி வளைப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
இதேவேளை, அதிவேக வீதி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வீதி விதிமுறைகளை மீறுவோர் குறித்தும் இன்று அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாக அவர் கூறினார்.
இதேவேளை, அதிவேக வீதிகளின் பயணிக்கும் வாகன சாரதிகள், தமது பயண பாதையிலிருந்து தீடிரென மற்றைய பயண பாதைக்கு வாகனங்களை செலுத்த வேண்டாம் என அதிவேக வீதி நடவடிக்கை பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.