சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை | இந்த ஆண்டு ஆஸ்கரை அள்ளிய `சிங்கப் பெண்கள்’ இவர்கள்தாம்!

Date:

93-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா பெருந்தொற்றின் காரணமாக, எளிமையாக நடத்தப்பட்டது. இந்த ஆண்டு பெண்கள் அதிக அளவில் பல பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தனர். எதிர்பார்த்ததைப் போலவே பல பெண்கள் ஆஸ்கர் விருதுகளை அள்ளிச் சென்றிருக்கிறார்கள்!

93-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா பெருந்தொற்றின் காரணமாக, எளிமையாக நடத்தப்பட்டது. இந்த ஆண்டு பெண்கள் அதிக அளவில் பல பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தனர். எதிர்பார்த்ததைப் போலவே பல பெண்கள் ஆஸ்கர் விருதுகளை அள்ளிச் சென்றிருக்கிறார்கள்!

க்ளோயி ஸாவ் இயக்கிய `நோமேட்லேண்ட்’ திரைப்படம் ஏற்கெனவே கோல்டன் குளோப் விருதை வாங்கி, எதிர்பார்ப்புகளை எகிற வைத்துக்கொண்டிருந்தது. நோமட்லேண்ட் சிறந்த திரைப்படம், இயக்கம், நடிப்பு எனப் பல்வேறு விருதுகளை அள்ளிச் சென்றிருக்கிறது. இந்தத் திரைப்படத்தை இயக்கிய க்ளோயி ஸாவ் சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை வென்றதன் மூலம், இந்த விருதை வென்ற இரண்டாவது பெண் என்கிற சாதனையைப் படைத்திருக்கிறார். பொருளாதார வீழ்ச்சியின் காரணமாகப் பணியை இழந்த ஒரு பெண்ணின் கதை இது. தன் உடைமைகளை விற்று ஒரு வேனில் ஊர் ஊராகப் பயணிக்கும் அந்தப் பெண்ணை பின்தொடர்கிறது ‘நோமேட்லேண்ட்’ படம்.

`தி ஹர்ட் லாக்கர்’ திரைப்படத்துக்காக கேத்ரின் பிகலோ சிறந்த இயக்குநருக்கான விருதை வென்று முதல் இடத்தில் இருக்கிறார். இப்போது இயக்கத்துக்கான ஆஸ்கரை வென்ற முதல் ஆசியப் பெண் என்ற சாதனையும் க்ளோயி ஸாவ் அடைந்திருக்கிறார்!

சீனாவில் பிறந்து, லண்டனில் படித்து, அமெரிக்காவில் வசித்து வருகிறார் 39 வயது க்ளோயி ஸாவ். 2015-ம் ஆண்டு இவருடைய முதல் திரைப்படம் (Songs My Brothers Taught Me) வெளிவந்து, பாராட்டுகளைப் பெற்றது. `நோமேட்லேண்ட்’ இவரின் மூன்றாவது திரைப்படம். ஐந்தே ஆண்டுகளில் மூன்றாவது திரைப்படத் திலேயே ஆஸ்கரை க்ளோயி ஸாவ் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

`நோமேட்லேண்ட்’ திரைப்படத்தில் நடித்த ஃப்ரான்சிஸ் மெக்டார்மண்ட், மூன்றாவது முறையாகச் சிறந்த நடிகைக்கான ஆஸ்கரை வென்றுள்ளார்! காத்ரின் ஹெப்பர்ன் நான்கு முறை ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளார். அவருக்குப் பிறகு மெரில் ஸ்ட்ரீப்பும் ஃப்ரான்சஸ் மெக்டோர்மண்ட் இருவர் மட்டுமே மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தென் கொரிய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகையான யூ ஜங் யூன், `மினாரி’ திரைப்படத்துக்காகச் சிறந்த குணச்சித்திர துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார்.
73 வயதான இவர், இந்த விருதை வெல்லும் முதல் கொரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தைச் சேர்ந்த 35 வயது நடிகையும் இயக்குநருமான எமரால்ட் ஃபென்னெல், ஒரிஜினல் ஸ்க்ரீன் ப்ளேவுக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார். `ப்ராமிஸிங் யங் வுமன்’ திரைப்படத் துக்காக இந்த விருது கிடைத்திருக்கிறது. இங்கிலாந்து அரசக் குடும்பம் குறித்த `கிரவுன்’ நெட்ஃப்ளிக்ஸ் சீரிஸிலும் இவர் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நெட்ஃப்ளிக்ஸின் `மை ஆக்டோபஸ் டீச்சர்’ சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. இந்த ஆவணப்படத்தின் இயக்குநர்களில் ஒருவர் பிப்பா எக்ஹ்லிச்.

ஆஸ்கர் விருதுகளை வென்ற அத்தனை பெண்களுக்கும் வாழ்த்துகள்!

நன்றி விகடன் 

Popular

More like this
Related

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம்...

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...