சிலாபம், கொஸ்வத்தை பொலிஸ் நிலையம் இன்று காலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் கொஸ்வத்தை பொலிஸ் நிலைய கடமைகள் பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரையொன்றில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது .