சீனாவின் மகுடியில் ஆடும் இலங்கை தனது பல் அகற்றப்பட்டுள்ளது என அறிந்தும் பெட்டியினுள் உள்ள முட்டைகளை கொத்தி குடிப்பது போல் இலங்கை முஸ்லிம்களின் விடயத்தில் செயற்படுகிறது என தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தலைவர் முஸம்மில் முகைதீன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று (15) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் தெரிவிக்கப்படுவதாவது
இலங்கை ஆட்சி சட்டத்தின் கீழ் ஒரு சிறிய சட்டங்கள் கூட இருக்க கூடாது என்கிறது சீனா இலங்கையில் காலி முகத்தின் அருகில் அமைக்கப்பட்டு வரும் போர்ட் சிடி (port city )க்கு. அது ஒரு தனி குடாவாக சீனாவின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்கும் வகையிலேயே சீனா முழுத்திட்டங்களையும் வெற்றிகரமாக அமைத்து வருவது இலங்கை நாட்டிற்கு மிகவும் ஒரு பின் விளைவுகளை கொண்டு வரும் என்பதையும் தெளிவாக அறிந்த அரசாங்கம் மீண்டும் மீண்டும் சீனாவின் தயவை நாடி சென்றுகொண்டிருப்பது ஒரு வேடிக்கையான் விடயமே!
இன்று நாட்டின் எத்தைனையோ தீர்க்க முடியாத பிரச்சினைகள் குவிந்து மலிந்த நிலையில் தான் கடி நாயிடம் மாட்டி இருக்கும் அபாயம் அறியாத பூனை எலியை பிடித்து நசுக்குவது போல் உள்ளது இந்த அரசாங்கம் சிறுபான்மை முஸ்லிம்களின் பாரம்பரிய மத உரிமைகளிலும் கலாச்சார விழிமியங்களிலும் கைவைத்து வேடிக்கை பார்க்கிறது