ஜனாதிபதியின் உத்தரவுகளை மற்றும் அறிவுறுத்தல்களை பின்பற்றாத அதிகாரிகளை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இன்று வெளியாகியுள்ள ஆங்கில வார இதழ் ஒன்று பிரதான தலைப்புச் செய்தி தந்துள்ளது கடந்த ஆண்டு ஜனாதிபதி செயலகத்தால் அரச நிறுவனங்களுக்கு இரண்டு சுற்றுநிருபங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. நாட்டின் அரச நிர்வாகத்தின் கீழ் வரும் தகவல் தொழில்நுட்பங்கள் சம்பந்தமான அனைத்து விடயங்களையும் தகவல் தொழில் நுட்ப தொலைத்தொடர்பு முகவரா ண்மையான ICTA இன் கீழ் கொண்டுவருமாறு இந்த சுற்று நிருபங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால் பல அரசாங்க நிறுவனங்கள் குறிப்பாக அரச வங்கிகள் இந்த சுற்று நிருபத்தை உதாசீனம் செய்துள்ளன இதனால் இது தொடர்பான விளக்கங்களை வழங்குமாறு உரிய அதிகாரிகளுக்கு மற்றுமொரு சுற்றுநிறுபம் தற்போது அனுப்பப்பட்டுள்ளது ஜனாதிபதியின் உத்தரவுகளையும் அறிவுறுத்தலையும் மீறி செயற்படும் அதிகாரிகளை இனம் கண்டு அவர்களிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரியவருகின்றது