தாய்வானில் புகையிரத விபத்து | 36 பேர் பலி பலர் கவலைக்கிடம்

Date:

தாய்வானில் முறையாக நிறுத்தி வைக்கப் படாத லொறி ஒன்று தண்டவாளத்தில் விழுந்ததால் அதன்மீது மோதிய ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் சுமார் 36 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தாய்வானின் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில், ஹூவாலியன் அருகே உள்ள ஒரு சுரங்கப்பாதையை நெருங்கிய போது விபத்தில் சிக்கியது.

திடீரென தடம்புரண்ட ரயில், சுரங்கப்பாதையின் பக்கவாட்டு சுவரில் மோதியபடி சிறிது உள்ளே தூரம் இழுத்துச் செல்லப்பட்டு நின்றது. இதனால் ரெயில் பெட்டிகள் கடுமையாக சேதமடைந்தன. உள்ளே இருந்த பயணிகள் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் கூக்குரலிட்டனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்ததாகவும், 72 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தடம்புரண்ட ரயிலுக்கு அருகில் லொறி ஒன்றின் சிதைந்த பாகங்கள் கிடந்தன. சரியாக பார்க்கிங் செய்யப்படாத லொறி ஒன்று சரிந்து தண்டவாளத்தில் விழுந்திருப்பதாகவும், அந்த லொறி மீது மோதியதால் ரயில் தடம்புரண்டிருக்கலாம் எனவும் அந்நாட்டு ரயில்வே நிர்வாகம் கூறி உள்ளது.

Popular

More like this
Related

காஸா சிறுவர் நிதியத்திற்கு அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளும் காலம் மே 31 வரை நீடிப்பு

காசாவில் இடம்பெறும் மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்...

ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு மே தினக் கூட்டங்களை நடத்த தீர்மானம் !

ஐக்கிய மக்கள் சக்தி  இந்த ஆண்டு இரண்டு மே தின பேரணிகளை...

பரீட்சை திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்!

மே 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சாதாரணத் தர பரீட்சை தொடர்பான...

ஊடகவியலாளர் அசாம் அமீனை பணியில் இருந்து நிறுத்தியதற்காக பிபிசிக்கு எதிராக தொழிலாளர் நீதிமன்றம் தீர்ப்பு!

இலங்கையைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளர் அசாம் அமீனை, ஒப்பந்தம் காலம் நிறைவடைவதற்கு...