தேர்தல் வாக்காளர் பட்டியல் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை புதுப்பிக்கப்பட உள்ளது

Date:

இதுவரை வருடத்துக்கு ஒரு தடவை புதுப்பிக்கப்பட்டு வந்த தேர்தல் வாக்காளர் பட்டியல் இனிமேல் வருடாந்தம் மூன்று தடவைகள் புதுப்பிக்கப்பட உள்ளது. இது தொடர்பான சட்ட மூலம் ஒன்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த சட்டமூலத்தின் படி 18 வயதை அடைந்த ஒருவர் தான் அந்த வயதை அடைந்த 2 வார காலத்துக்குள் தனது மாவட்ட அலுவலகத்திற்கு சென்று தன்னை ஒரு வாக்காளராக பதிவு செய்து கொள்ள முடியும். வாக்காளர் பட்டியல் வருடாந்தம் புதுப்பிக்கப்படும் வரை அவர் காத்திருக்க தேவையில்லை .

தனது தேசிய அடையாள அட்டை அல்லது பிறப்புச் சான்றிதழ் என்பனவற்றை சமர்ப்பித்து தானாகவே நேரடியாக சென்று மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் உரிய பிரிவில் தன்னை ஒரு வாக்காளராக பதிவு செய்து கொள்ள முடியும். அடுத்து அடுத்து வரும் தேர்தல்களில் அதிகப்படியான வாக்காளர்களை பங்கேற்கச் செய்யும் நோக்கிலேயே இந்த சட்டமூலம் கொண்டுவரப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பெப்ரவரி மாதம் முதலாம் திகதிக்கும் மே மாதம் 31ஆம் திகதி க்கும் இடைப்பட்ட காலத்தில் முதலாவது வாக்காளர் பட்டியல் மறுசீரமைப்பும் அதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் 1ஆம் திகதி க்கும் செப்டம்பர் மாதம் 30-ஆம் திகதி க்கும் இடைப்பட்ட காலத்தில் இரண்டாவது வாக்காளர்பட்டியலும்
தயாரிக்கப்படும் மூன்றாவது வாக்காளர் பட்டியல் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் ஜனவரி 31 வரையான காலப்பகுதியை உள்ளடக்கியதாக இருக்கும் இந்த காலப்பகுதிக்குள் தயாரிக்கப்படும் புதிய வாக்காளர்கள் அடங்கிய வாக்காளர் பட்டியல் உரிய மாவட்ட அலுவலகத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு காட்சிக்கு வைக்கப்படும். அதனைத் தொடர்ந்து அது இரண்டு வார காலத்துக்குள் பிரதான பட்டியலோடு சேர்த்துக்கொள்ளப்படும். இதன்படி ஒருவர் 18 வயதை அடைந்த கையோடு அடுத்து வரும் தேர்தலில் வாக்களிக்க கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது .

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...