அண்மையில் முடிவுற்ற பண்டிகைக் காலத்தின் போது அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடான வாகனப் போக்குவரத்தின் மூலம் மூன்று கோடி 50 லட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்பிரல் எட்டாம் திகமி முதல் 11 தினங்களில் இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட இந்தக் காலப் பகுதியில் 12லட்சத்து 36 ஆயிரத்து வாகனங்கள் நாட்டின் அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாகப் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இவற்றுள் பெரும்பாலான வாகனங்கள் ஏப்பிரல் மாதம் பத்தாம் திகதியே நெடுஞ்சாலைகள் ஊடாகப் பயணித்துள்ளன.