பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்றைய தினம்(29) சந்தித்து கொவிட்19 வைரஸ் காலத்தில் இந்தியாவுடனான கூட்டொருமைப்பாட்டுக்காக இலங்கையின் தலைமைத்துவத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.அத்தோடு சகலதுறைகளிலும் இருதரப்பு உறவை உயர்நிலைக்கு கொண்டு செல்ல பிரதமரின் வழிகாட்டுதலையும் அவர் கோரினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகலை இந்திய உயர் ஸ்தானிகராலயம் தனது ட்விட்டர் பதிவின் மூலம் வெளிப்படுத்தியுள்ளது.
இச் சந்திப்பில் கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மற்றும் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் கலந்து கொண்டனர் .