மண்சரிவு ஆபாய எச்சரிக்கை | பொலிஸார் அறிவுறுத்தல்

Date:

கொழும்பு – பதுளை பிரதான வீதி, நுவரெலியா – பதுளை வீதி வாகனப் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடுவோர் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

மாலை வேளையில், இந்த பகுதிகளல் மிகுந்த பனிமூட்டம் காணப்படுவதினால் வாகன போக்குவரத்தின் போது மிகுந்த கவனம் செலுத்துமாறும் பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

மத்திய மலையகப் பிரதேசம் உட்பட நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை காரணமாக வீதிகளிலும் ரயில் பாதைகளிலும் மண்மேடுகள் சரிந்து வீழ்ந்துள்ளன. பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல, ஹாலிஎல உள்ளிட்ட பிரதேச செயலக பிரிவுகளில் இந்த நிலை காணப்படுகின்றது.

இதேவேளை, கொழும்பு – பதுளை பிரதான வீதியில் மரங்கஹவெல, ஹல்தும்முல்ல, தியதலாவ போன்ற பிரதேசங்களிலும், வெலிமட – பதுளை வீதியில் ஹாலிஎல, அம்பவக்க, மொரேதொட்ட பிரதேச வீதிகளிலும் மண்மேடு சரிந்து வீழ்ந்தமை மற்றும் கற்பாறைகள் வீழ்ந்த சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. ஹாலிஎல – அம்பவக்க பிரதேசத்தின் பிரதான வீதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததனால், வெலிமட – பதுளை வீதியில் நேற்று வாகனப் போக்குவரத்து மூன்று மணிநேரம் தடைப்பட்டிருந்தது.

Popular

More like this
Related

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...