மன்னாரிற்கு கடத்தி வரப்பட்ட 1989 கிலோ மஞ்சல் கட்டி மூடைகளுடன் 5 பேர் கைது

Date:

யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாரிற்கு கடத்தி வரப்பட்ட 1989 கிலோ கிராம் மஞ்சல் கட்டி மூடைகளுடன் மன்னாரைச் சேர்ந்த 5 நபர்களை இன்று (14) புதன் கிழமை(14) காலை 7.55 மணியளவில் மூன்றாம் பிட்டி பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாரிற்கு மஞ்சல் கட்டி மூடைகள் கடத்தப்படுவதாக இலுப்பைக்கடவை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் விரைந்து செயல் பட்ட இலுப்பைக்கடவை பொலிஸார் மூன்றாம் பிட்டி பகுதியில் வைத்து இன்று புதன் கிழமை(14) காலை வாகனம் ஒன்றில் கடத்தி வரப்பட்ட குறித்த மஞ்சல் கட்டி மூடைகளை கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட மஞ்சல் கட்டி மூடைகள் 1989 கிலோ கிராம் நிறை கொண்டதோடு, குறித்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட மன்னாரை சேர்ந்த 5 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
-கைப்பற்றப்பட்ட மஞ்சல் கட்டி மூடைகள்,மற்றும் வாகனம் என்பன இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, கைது செய்யப்பட்ட குறித்த 5 நபர்களும் இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைக்கு உற்படுத்தப்பட்டு வருகின்றனர்.
விசாரனைகளின் பின்னர் மீட்கப்பட்ட மஞ்சல் கட்டி மூடைகள் மற்றும் வாகனம் என்பன மன்னார் நீதிமன்றத்தில் ஓப்படைக்கப்பட உள்ளதோடு, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 5 பேரூம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நிருபர்

Popular

More like this
Related

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...

இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை : வெளிவிவகார அமைச்சு தகவல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து இலங்கை இராஜதந்திர தூதரகங்களுடனும் நெருங்கிய...

சவூதி, பஹ்ரைன், கத்தார், UAE மீதும் ஈரான் தாக்குதல்.. அமெரிக்காவால் வெடிக்கும் 3ம் உலகப்போர்?

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ஆக்ரோஷமாக தாக்கி வருகின்றன. இதையடுத்து...

மத்தியக் கிழக்கில் போர் பதற்றம்: ஸ்ரீலங்கன் விமான சேவையில் தாமதம்

இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள்...