கொரோனா தொற்று காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளதால் மரக்கறிகளின் விலை கடுமையாக அதிகரிக்கக்கூடும் என அனைத்து இலங்கை விவசாயிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு மூடப்பட்டதன் காரணமாக அரசாங்கம் விவசாயிகளுக்கும் , நுகர்வோருக்கும் தற்காலிகத் தீர்வை வழங்கத் தவறியுள்ளதாகவும் குறித்த சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன குறிப்பிட்டார்.
நுகர்வோர் அதிக விலை கொடுக்க வேண்டிய அபாயத்தை எதிர்கொள்ளும் அதே நேரத்தில் விவசாயிகள் பொருட்களை விற்பனை செய்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ள தாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
கொவிட் தொற்று காலப்பகுதியில் இதுபோன்ற முடிவுகளை எடுப்பது முக்கியம் என்றாலும் விவசாயிகள் மற்றும் நுகர்வோர் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.