மாகாண சம்பியனாக கிண்ணியா நோவா அணியினர் முடிசூடிக் கொண்டது

Date:

46 ஆவது தேசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு கிழக்கு மாகாண ரீதியாக உதைப்பந்தாட்டப் போட்டித் தொடர் இடம் பெற்றது. இதில் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை ,மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்குபற்றிய நிலையில் இறுதிப் போட்டியில் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து கலந்து கொண்ட கிண்ணியா நோவா அணியினர்மாகாண சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக் கொண்டது.
இறுதிப் போட்டியானது கந்தளாய் லீலரத்ன பொது விளையாட்டு மைதானத்தில் (05) இடம் பெற்றது. அம்பாறை அணியினருடன் நோவா அணியினர் ஒன்றுக்கொன்று எதிர்த்தாடிய நிலையில் 5:0 என்ற கோள் கணக்கில் முதல் சுற்றில் வெற்றியடைந்து இறுதிச் சுற்றுக்கு சென்றிருந்தனர் இறுதிச் சுற்றில் மட்டக்களப்பு அணியினருடன் எதிர்த்தாடி 3:1 என்ற கோள் கணக்கில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட கிண்ணியா நோவா அணியினர் சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டனர்.
போட்டியில் சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக் கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களும் அணிவிக்கப்பட்டன. இதில் கிழக்கு மாகாண விளையாட்டு பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தார்கள்.
ஹஸ்பர் ஏ ஹலீம்

Popular

More like this
Related

தலாவ பகுதியில் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து: 06 பேர் உயிரிழப்பு!

அநுராதபுரம், தலாவ, ஜயகங்க சந்திப் பகுதியில் தனியார் பஸ் ஒன்று கவிழ்ந்து...

2026 ஆம் ஆண்டிற்கான ஹஜ் யாத்திரை: இலங்கை- சவூதி அரேபியா ஒப்பந்தம் கைச்சாத்து.

2026 ஆம் ஆண்டிற்கான ஹஜ் ஒப்பந்தம் இலங்கை சவூதி அரேபியாவிற்கிடையில் கைசாத்திடப்பட்டது. நேற்று...

குர்ஆனின் மொழியில் அறிவியல் பேசிய குரல் மறைந்தது!

முஹம்மத் பகீஹுத்தீன் பேரறிஞர் டாக்டர் ஸக்லூல் ராகிப் முஹம்மத் அல் நஜ்ஜார் (1933...

க.பொ.த உயர்தரப் பரீட்சையையொட்டி விசேட போக்குவரத்து சேவைகள்.

க.பொ.த உயர்தரப் பரீட்சையையொட்டி  விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பரீட்சைக்காலங்களில் மாணவர்கள் மற்றும்...