மீண்டும் பாடசாலைகள் மூடப்படுமா? வெளியானது கல்வி அமைச்சின் தீர்மானம்.

Date:

நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை சில சுகாதார கட்டுப்பாடு விதிகளுக்கு அமைவாக தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு கல்வி அமைச்சு எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர்கள் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவினால் பாடசாலைகளை நடாத்தும் முறை குறித்து திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

கொவிட் பரவலை தடுக்கும் வகையில் கடந்த 23 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டலுக்கு அமைய 50% மாணவர்களுடன் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.இதேவேளை மேலதிக வகுப்புக்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி நடவடிக்கைகளை தொடர அனுமதி மறுக்கப்பட்டுள்ளதோடு அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளையும் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...