இஸ்லாம் மத நம்பிக்கையின் படி, தமது கிரிக்கெட் உடையில் மதுபான விளம்பரம் இடம்பெற கூடாது என்ற சி.எஸ்.கே அணி வீரர் மோயின் அலியின் கோரிக்கையை, அணி நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளது.
சி.எஸ்.கே அணியின் ஸ்பான்சர்களில் ஒன்றாக மதுபான நிறுவனமான பிரிட்டிஷ் எம்பயர் உள்ளது. அதை குறிக்கும் லோகா மோயின் அலியின் ஜெர்சியில் இடம் பெறாது.
சி.எஸ்.கே அணியில் தென்னாப்பிரிக்க லெக் ஸ்பின்னர் இம்ரான் தாஹிர் மற்றும் ஆசிப் ஆகிய வீரர்களும் உள்ளனர். இம்ரான் தாஹிர் ஏற்கனவே கடந்த காலங்களில் மதுபான லோகோக்களை அணிய மறுத்து அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.