கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 6% பேருக்குத்தான் மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுகிறது. இந்தியா, இந்த 6 சதவிகிதம் பேரிடம் தீவிர கவனம் செலுத்தினால், நாட்டில் கொரோனாவால் ஏற்படும் மொத்த இறப்பு விகிதம் இப்போதிருப்பதைவிடக் குறைவாகவே இருக்கும்.
கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் மருத்துவமனைகளில் இடமின்மை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்று பல சிக்கல்களுக்கு கோவிட்-19 நோயாளிகள் ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், கோவிட்-19 தொற்றுக்குப் பாதிக்கப்பட்டவர்களில் 94 சதவிகிதம் பேரை வீட்டிலேயே சின்னச் சின்ன சிகிச்சைகளின் மூலம் குணப்படுத்திவிட முடியும் என்கிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் மனோஜ் குரியகோஸ். கோவிட் நோயாளிகளில் யார் யாருக்கு, எப்படிப்பட்ட சிகிச்சை வேண்டும் என்று அவர் வெளியிட்டிருந்த விளக்கங்கள் தமிழில்…
“கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 6% பேருக்குத்தான் மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுகிறது. இந்தியா, இந்த 6 சதவிகிதம் பேரிடம் தீவிர கவனம் செலுத்தினால், நாட்டில் கொரோனாவால் ஏற்படும் மொத்த இறப்பு விகிதம் இப்போதிருப்பதைவிடக் குறைவாகவே இருக்கும். அதேநேரம், தீவிர சிகிச்சையும் யாருக்குத் தேவைப்படுகிறதோ அவர்களுக்குக் கிடைப்பதில் சிக்கல் இருக்காது.
சரி, கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட மீதி 94% பேருக்கான சிகிச்சைக்கு என்ன செய்வது? அவர்களுக்கான தீர்வு என்னவென்பதைப் பார்ப்போம்…
ஒருவர் கொரோனா பாசிட்டிவ் என்று பரிசோதனையில் தெரியவருகிறது. உங்களுக்குக் குறைந்த அளவிலான நோய் அறிகுறிகள் இருக்கின்றன. அதாவது, சளி, காய்ச்சல், இருமல், உடல் வலி ஆகியவற்றில் ஏதேனும் சில மட்டுமே இருக்கின்றன அல்லது எந்த அறிகுறியுமே தென்படவில்லை. அப்படியென்றால், அவருடைய நோய் எதிர்ப்பாற்றல் இந்த வைரஸுக்கு எதிராக நன்கு செயலாற்றி கட்டுக்குள் வைத்துக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
அடுத்த ஒரு வாரம் அல்லது பத்து நாள்களில் இந்த அறிகுறிகள் அனைத்தும் குறைந்துவிடும். இடைப்பட்ட நேரத்தில் வாசனை, ருசி ஆகிய திறன்களை நீங்கள் இழக்க நேரிடலாம். ஆனால், நீங்கள் எந்தச் சிக்கலுமின்றி, சில அடிப்படை சிகிச்சைகளின் மூலமே குணமடைந்துவிடுவீர்கள்.
உங்களுடைய குடும்ப நல மருத்துவரோடு தினமும் தொடர்பிலேயே இருங்கள். தினசரி உங்கள் உடல்நிலை குறித்து அவரிடம் தெரிவித்துவிடுங்கள். நான் சுமார் 1,300 பேருக்கு இந்த முறையில் வெற்றிகரமாக சிகிச்சை அளித்துள்ளேன். கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இந்த 94 சதவிகிதம் பேருக்கு இந்த மாதிரியான சிகிச்சைகளை வழங்கினாலே போதும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
நாம் எங்கே தவறு செய்கிறோம்?
RT-PCR தான் கோவிட் தொற்றைக் கண்டறிவதற்கான முக்கியமான பரிசோதனை. அதுமட்டுமன்றி, அது 65 முதல் 70% வரைதான் துல்லியமாகக் கண்டறியும். அதில் மீதி 30 – 35% பேருக்கு பாசிட்டிவாக இருந்தாலும் நெகட்டிவ் என்று காட்டுவதற்கான சாத்தியங்கள் உள்ளன.
சரி, நமக்கு ஏற்படும் சளி, இருமல், காய்ச்சல் அனைத்துமே கோவிட் தொற்றுதான் என்று ஓர் அனுமானத்தை எடுத்துக்கொள்வோம். கோவிட்-19 பரிசோதனை செய்துகொள்ளாமல், நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொண்டு, அரசு விதித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றி, மேலே நான் குறிப்பிட்டிருப்பதுபோல் சிகிச்சை எடுத்துக்கொண்டு ஒரு வாரத்திலோ 10 நாள்களிலோ குணமடைந்துவிடுவோம்.

அல்லது கோவிட் பரிசோதனை செய்துகொண்டு பாசிட்டிவ் என்று வந்தாலும் மேலே குறிப்பிட்ட வகையில் சிகிச்சை எடுத்து 10 நாள்களுக்குள் குணமடைந்துவிடலாம். ஆனால், பாசிட்டிவ் ஆனவர்களில் 10% பேரிடம்தான் இது சாத்தியமாகிறது. மீதி 90% பேருக்கு என்ன ஆகிறது தெரியுமா?
பயம், பதற்றம் என்று அத்தனையும் அவர்களைப் பீடித்துக் கொள்கின்றன. இரண்டாம் அலையின் வீரியத்தைக் கண்டு பயம். அதன் விளைவாக, சுற்றியிருப்பவர்களின் அறிவுரைகளுக்குச் செவி சாய்க்கத் தொடங்குகிறார்கள். நண்பர்கள், உறவினர்கள், உடன் பணிபுரிபவர்கள் என்று ஒவ்வொருவரும் அவரவர் அனுபவங்களில் இருந்து சொல்வார்கள். அதோடு சமூக வலைதளங்களில் வரும் செய்திகள் என்று அனைத்துமாகச் சேர்ந்து அச்சுறுத்துகின்றன.
உங்களுக்குப் பெரிதாக எந்த நோய் அறிகுறியும் இருக்காது. ஆனால், இப்படிச் சுற்றியுள்ள அனைவரின் பேச்சுகளையும் கேட்டு நீங்கள் பதற்றமடையும்போது, உங்களுடைய சுவாசத்தில் சிக்கல் ஏற்படுகிறது. நுரையீரலுக்கு அதிகமாக கார்பன் டை ஆக்சைடு செல்கிறது. இதனால் சுவாசக் கோளாறு ஏற்படும். இப்போது D-Dimer, C Reactive Protein, இதயத்தின் CT Scan ஆகிய பரிசோதனைகளைச் செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
இதில் D-Dimer, C Reactive Protein ஆகிய இரண்டு பரிசோதனைகளும் கோவிட் தொற்றுக்கு என குறிப்பாகச் செய்யக்கூடியவை அல்ல. அவை, வீக்கம் அல்லது ஏதேனும் தொற்று பாதிப்பு இருக்கிறதா என்பதை அறிந்துகொள்வதற்கான பொதுவான பரிசோதனைகளே. அடுத்து, இதயத்தை சி.டி ஸ்கேன் செய்யும்போது, கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 80% பேருக்கு, அவர்களுடைய நுரையீரலில் பிரச்னை இருப்பதாகத் தெரியும். ஆனால், அது உண்மையில்லை. இந்தப் பிரச்னை கோவிட்-19 தொற்றுக்கு மட்டுமே வருவதல்ல. இது பல காரணங்களால் ஏற்படுகிறது. இப்போது மருத்துவர், Remdesvir என்ற ஆன்டி-வைரல் மருந்தைக் கொடுக்கத் தொடங்குகிறார். ஆனால், இது கோவிட் தொற்றுக்கு எதிராகச் செயலாற்றுவதில்லை என்று உலக சுகாதார நிறுவனமே கூறிவிட்டது.
இதுபோக, ஆன்டிபயாடிக், ஸ்டீராய்டு ஆகிய மருந்துகளும் பரிந்துரைக்கப்படுகின்றன. நீங்கள் பதற்றமடையும்போது, உங்கள் மருத்துவரும் உங்கள் உடல்நிலை குறித்து பதற்றமடைவதோடு, உங்களை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு கூறுவார்.
ஆனால், நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியதெல்லாம் உங்கள் நோய் எதிர்ப்பாற்றல் கோவிட்டுக்கு எதிராகச் சிறப்பான வேலையைச் செய்துகொண்டிருக்கிறது.
நீங்கள் உங்களுடைய அடிப்படை அறிவையும் எதார்த்த சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு, கோவிட் பாசிட்டிவ் என்று வந்தால் அதை எந்த வகையில் கையாள்வது என்பதைத் தீர்மானிக்க வேண்டும். கோவிட் தொற்று காற்று மூலமாகவும் பரவுகிறது, ஆகவே அதன் பரவல் வேகமாக உள்ளது என்று அதிகாரிகள் சொல்கின்றனர்.
இரண்டாம் அலையின் தீவிரத்தை வைத்துப் பார்க்கும்போது, நம்மில் பலரும் ஏதாவதொரு சூழலில் கோவிட் தொற்றுக்கு பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. அந்த நேரத்தில், நாம் எந்த மாதிரியான சிகிச்சையை எடுத்துக் கொள்ளப்போகிறோம் என்ற தெளிவோடு தயாராக இருக்க வேண்டும்.
நன்றி விகடன்