றிசாட் பதியூதீனை விடுதலை செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

Date:

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனை விடுதலை செய்யுமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (28) காலை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த ஆர்பாட்டகாரர்கள்இ

றிசாட் பதியூதீனை அதிகாலையில் சென்று கைது செய்யப்பட்டதையிட்டு வேதனையடைகின்றோம். பாராளுமன்ற உறுப்பினரான அவரை கைதுசெய்வதாக சபாநாயகருக்கு கூட அறிவித்தல் விடுக்கப்படவில்லை. அவரது கைதுக்கு வன்மையாக கண்டனங்களை தெரிவிக்கின்றோம். அரசாங்கம் தன்னுடைய தோல்வியை மறைப்பதற்காக இவ்வாறான கைதுகளை முன்னெடுத்து வருகின்றது.

சிறுபான்மை சமூகங்களிற்கு முன்னெடுக்கப்படும் அநீதிகளிற்கெதிராக வீதியில் இறங்கியே நாம் போராட வேண்டியுள்ளது. எனவே எமது தலைவரை விடுவிக்காத பட்சத்தில் நாடளாவிய ரீதியில் எமது போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும். என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசுக்கு ஆதரவு வழங்காததற்கா இந்த கைதுஇ சிறுபான்மை தலைமைகள் விடுதலைசெய்இ உண்மையான சூத்திரதாரிகளை கைதுசெய்இ அரசே பழிவாங்காதே போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

இதன்போது வவுனியா நகரசபையின் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினரான ரி. கே. இராசலிங்கம், இகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களான ஏ. ஆர். எம். லரிப், அப்துல் பாரி உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியா நிருபர்

Popular

More like this
Related

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா உடல் நலக்குறைவால் காலமானார்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று...

சதொச நிறுவனத்தினால் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனத்தினால் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின்...