பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஸவின் புதல்வரான ரகித்த ராஜபக்ஸ கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிகட பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ரகித்த ராஜபக்ஸ, இன்றைய தினமே கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே, இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் வெலிகட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.