ஸ்டெர்லைட் ஆக்ஸிஜனை மத்திய அரசிடம் வழங்க வேண்டும் | ஆலையை திறக்கலாம்!’ | உச்ச நீதிமன்றம்

Date:

`ஸ்டெர்லைட் ஆலையில் ஊர்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜனை மத்திய தொகுப்பில் வழங்க வேண்டும். அவர்கள் மாநிலங்களுக்கு பிரித்து வழங்குவார்கள்’ எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்குவது தொடர்பான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. முன்னதாக நேற்று தமிழகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மட்டும் ஆலையை திறக்க அனைத்து கட்சிகளும் ஒப்புதல் வழங்கினர். அப்போது, தமிழக அரசு, `ஆக்ஸிஜன் உற்பத்தியை காரணமாக வைத்துக் கொண்டு ஆலையில் வேறு எந்த பிரிவையும் இயக்கக் கூடாது’ என வாதிட்டது.

தொடர்ந்து மத்திய அரசு, “ஸ்டெர்லைட்டில் உற்பத்தி செய்யப்படவுள்ள ஆக்ஸிஜனை எங்களுக்கு தான் தர வேண்டும். அங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜனை தேவைப்படும் மாநிலங்களுக்கு நாங்கள்தான் பிரித்து வழங்குவோம்” என வாதிட்டது. இதனிடையே உச்ச நீதிமன்றத்தில் வாதிட்ட ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர், “உள்ளூர் மக்களை கண்காணிப்பு குழுவில் சேர்க்கக் கூடாது” என எதிர்ப்பு தெரிவித்தார்.

உச்சநீதிமன்ற நீதிபதி சந்திர சூட், “உற்பத்தியாகும் ஆக்ஸிஜனை மத்திய அரசு ஒதுக்குவதே முறை என ஏற்கெனவே ஒரு உத்தரவு இருக்கிறது. அரசின் கண்காணிப்பின் கீழ் ஸ்டெர்லைட் ஆலை இயக்கப்படலாம். அப்போது ஆலை நிர்வாகமும் இருக்கலாம்” என்றார். தொடர்ந்து வாதிட்ட தமிழக அரசு, “ஆக்ஸிஜன் உற்பத்தியில் தமிழகத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்” என்றார்.

ஆனால் தொடர்ந்து வாதிட்ட மத்திய அரசு, சட்டம் ஒழுங்கு சிக்கலை காரணம் காட்டி உள்ளூர் மக்களை கண்காணிப்பு குழுவில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், “ஆக்ஸிஜன் உற்பத்தியில் தமிழகத்துக்கு முன்னுரிமை வழங்க முடியாது” என்றும் தெரிவித்தது.

இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்றம், ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என அனுமதி அளித்தது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிக்க 5 நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் அந்த குழுவை, தேசிய சுற்றுசூழல் பொறியியல் ஆய்வு மையம் முடிவு செய்யும். இது தவிர்த்து உள்ளூர் மக்கள் கொண்ட மேற்பார்வை குழு ஒன்றையும் அமைக்கலாம். அதனை நிபுணர்கள் குழு தேர்வு செய்யும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஸ்டெர்லைட் ஆலையில் ஊர்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜனை மத்திய தொகுப்பில் வழங்க வேண்டும். அவர்கள் மாநிலங்களுக்கு பிரித்து வழங்குவார்கள் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது முழுக்க முழுக்க ஆக்ஸிஜன் தயாரிப்புக்கான அனுமதி மட்டுமே. வேதாந்தாவின் வேறு எந்த பணிக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...