2020ல் அமெரிக்காவில் மோசமடைந்த மனித உரிமை மீறல்கள்

Date:

2020ம் ஆண்டு அமெரிக்காவில் மனித உரிமை மீறல்கள் மிக மோசமான கட்டத்துக்கு வந்ததாக சர்வதேச மன்னிப்புச் சபைக் குற்றம் சாட்டி உள்ளது. உலகளாவிய ரீதியில் மனித உரிமை மீறல்கள் பற்றி சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் தலைமைத்துவம், அவரது ஆட்சிக் காலத்தில் கருப்பு இனத்தவர்கள் நடத்தப்பட்ட விதம், பொலிஸாரின் அட்டூழியங்கள், கொரோணா நோய் பரவல் நிலை என்பன அமெரிக்காவில் மனித உரிமை மீறல்கள் மோசமான கட்டத்துக்கு வரக் காரணமாக இருந்ததாக கூறப்படுகின்றது.

பொது மக்கள் சட்டவிரோதமாகக் கொலை செய்யப்பட்டமை, பால் ரீதியான உரிமை மீறல்கள், சமாதானமான ஒன்று கூடல்களுக்கு எதிரான போக்கு என்பன உற்பட 15 வகையான மனித உரிமை மீறல்கள் அமெரிக்காவில் குறிப்பிட்ட ஆண்டில் இடம்பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...