covid-19 முதலாவது சொட்டு தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கான இரண்டாவது சொட்டு தடுப்பூசி வழங்கல் நாளை முதல் ஆரம்பம் ஆக உள்ளதாக மருந்துப் பொருள்கள் விநியோகத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இதன்படி சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு இந்த இரண்டாவது சுற்றின் போதும் முன்னுரிமை வழங்கப்படும் என்று அவர் தெரிவித்திருக்கின்றார். இலங்கையில் ஜனவரி மாதம் 29ஆம் திகதி முதல் முதலாவது சுற்று தடுப்பூசி மருந்து வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின .
ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரோ சனிகா தயாரிப்புகள் 500000 சொட்டுக்கள் இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது .
அதனைத் தொடர்ந்து இலங்கை மருந்தகக் கூட்டுத்தாபனம் மேலதிக சொட்டுக்களை கொள்வனவு செய்து இருந்தது.
ஏற்கனவே 9 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு முதலாவது சொட்டு வழங்கப்பட்டு இருக்கின்ற நிலையில் அவர்களுக்கான இரண்டாவது சொட்டு வழங்கும் நடவடிக்கை நாளை முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது .