தென்பகுதி அதிவேக நெடுஞ்சாலையில் கார் ஒன்றை
முற்றிலும் பாதுகாப்பற்ற விதத்தில் ஓட்டிச் சென்ற சம்பவம் தொடர்பாக இதுவரை 40 இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர் .அதிவேக பொலிஸ் போக்குவரத்து பிரிவினரே இவர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் 18 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அக்குரணை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் இன்று பிற்பகல் அளவில் பாணந் துறை
நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற விதத்தில் வாகனம் செலுத்திய இளைஞர்கள் கைது.
Date:
