`இந்தியாவுக்கு துணை நில்லுங்கள்..!’ – இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் நெட்டிசன்கள் கோரிக்கை

Date:

ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள மருத்துவமனைகள் தங்களது மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சப்ளை தேவை என ட்விட்டரில் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் பற்றாக்குறையை எதிர்கொள்வதற்கு இந்தியாவுடன் துணையாக நிற்குமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அந்த நாட்டில் வாழும் மக்கள் ட்விட்டர் மூலமாக கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி தனது கொடூர முகத்தை காட்டி வருகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதுடன், பல மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு பல்வேறு இழப்புகளை நாடு எதிர் கொண்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 25 பேர் ஆக்ஸிஜன் பற்றாக்குறையின் மூலம் இறந்துள்ளனர், மேலும் 60 நோயாளிகளின் உயிர்கள் ஆபத்தில் உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குறைந்த ஆக்சிஜன் அழுத்தமே இறப்புகளுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

மேலும் புது டெல்லியில் உள்ள பல தனியார் மருத்துவமனைகள் கடந்த நான்கு நாட்களாக தங்களது மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் விநியோகத்தை நிரப்ப போராடி வருகின்றன. அவர்களில் சிலர் நோயாளிகளை மற்ற சுகாதார வசதிகள் உள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றுமாறும் டெல்லி அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

தலைநகர் டெல்லியில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் மற்ற மாநிலங்களில் மருத்துவ ஆக்ஸிஜன், கொரோனா மருந்துகள், மற்றும் ரெடெசிவிர் ஜாப்ஸ் போன்றவைகளின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலை குறித்து குறித்து வியாழக்கிழமை உச்ச நீதிமன்றம் கூறுகையில், மத்திய அரசு இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு மருந்துகளை கையால்வது குறித்தும், ஆக்ஸிஜன் பற்றாக்குறையை போக்கும் வகையிலும், கொரோனா பாதித்த நோயாளிகளை மேலாண்மை செய்வது தொடர்பாகவும் தேசிய அளவிலான சட்டத்தை இயற்றும் என நம்பிக்கை தெரிவித்தது.

இந்நிலையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள மருத்துவமனைகள் தங்களது மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சப்ளை தேவை என ட்விட்டரில் வேண்டுகோள் வைத்துள்ளனர்.தொடர்ந்து #indianeedsoxygen என்ற ஹாஸ்டேக் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த நெருக்கடி நிலையை போக்குமாறும், இந்தியாவுக்கு ஆக்ஸிஜன் கொடுத்து உதவுமாறும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு பாகிஸ்தான் நாட்டு மக்கள் ட்விட்டரில் கோரிக்கை வைத்துள்ளனர். பாகிஸ்தானில் இந்த ஹாஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

 

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...