ஓய்வுபெற்ற மன்னார் மறைமாவட்ட ஆயர் ராஜப்பு ஜோசப் ஆண்டகைக்கு கிளிநொச்சி மக்களும் இறுதி அஞ்சலி

Date:

ஓய்வுபெற்ற மன்னார் மறைமாவட்ட ஆயர் ராஜப்பு ஜோசப் ஆண்டகைக்கு கிளிநொச்சி மக்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர். கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள தூய முழங்காவில் மாதா ஆலய முன்றலில் இறுதி அஞ்சலிக்கான சிறப்பு ஏற்பாடுகள் இடம்பெற்றிருந்தன. யாழ்பாணத்தில் இறுதி அஞ்சலி நிகழ்வுகளும், வழிபாடும் இடம்பெற்றதை தொடர்ந்து ஆயரின் திருவுடல் மன்னார் எடுத்து செல்லப்பட்டது. இந்த நிலையில் யாழ் மன்னார் வீதியில் குறித்த விசேட அஞ்சலி நிகழ்வு ஏற்பர்டு செய்யப்பட்டிருந்தது.

இதன்புாது அப்பகுதியில் கூடியிருந்த மக்கள் மாலை அணிவித்தும், மலர்தூவியும் இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தனர். அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், சார்ள்ஸ்நிர்மலநாதன் உள்ளிட்ட அரசியல்வாதிகளும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

தொடர்ந்து ஆயரின் திருவுடல் வாகன பேரணியுடன் மன்னார் நோக்கி பயணித்திருந்தது.

 

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...