தடை செய்யப்பட்ட அமைப்பினரை பள்ளிவாசல் நிர்வாகத்திலிருந்து நீங்குமாறு உத்தரவு

Date:

இலங்கையில் அண்மையில் தடை செய்யப்பட்ட 11  அமைப்புக்களினதும் அங்கத்தவர்களில் எவரேனும் பள்ளிவாசல் நிர்வாக சபைகளில் அங்கத்துவம் வகிப்பவர்களாக இருப்பின் அவர்களை தமது அங்கத்துவத்திலிருந்து விலகிக் கொள்ளுமாறு வக்பு சபை சகல பள்ளிவாசல் நிர்வாகங்களையும் வேண்டியுள்ளது.

வக்பு சபையின் பணிப்புரையின் பேரில் வக்ப் சபை மற்றும் முஸ்லிம் சமய கலாச்சார அலுவல்கள் பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரபினால் சகல பள்ளிவாசல்களினதும் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், முகாமைத்துவ சபையுடன் தொடர்புபட்ட அனைவருக்கும் இன்று (16) விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளில், 2021.04.13 ஆம் திகதிய 2223/3 இலக்க அதிவிஷேட வர்த்தமானி மூலம் 11 நிறுவனங்கள் இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டிருக்கின்றன. இதனால் ஏதேனும் பள்ளிவாசலொன்றின் தர்மகர்த்தாவோ (டிரஸ்டி) பொறுப்பாளரோ அல்லது எவ்வகையிலேனும் முகாமைத்துவத்துவத்துடன் தொடர்புடைய எவருமோ, தடை செய்யப்பட்டுள்ள இந்த ஏதேனும் அமைப்பின் அங்கத்தவர்களாகவோ அந்த அமைப்புடன் அல்லது அதனது பகுதிகளுடன்  தொடர்புபட்டவர்களாகவோ இருந்தால், அவர்களை உடனடியாக தமது நிலைகளில் இருந்து இராஜினாமாச் செய்யுமாறும் தாங்கள் நியமக்கப்பட்டதற்கான எந்த ஆவணத்தையும் திருப்பி ஒப்படைத்து விடுமாறும் குறித்த தர்மகர்த்தாக்களை, பொறுப்பாளர்களை, முகாமைத்துவத்துடன் தொடர்புடையவர்களை வக்பு சபை கண்டிப்பாகப் பணிக்கின்றது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...