தாய்வானின் வான்பரப்புக்குள் அத்துமீறிய சீன யுத்த விமானங்கள்

Date:

தாய்வானின் வான் பரப்புக்குள் முன்னொரு போதும் இல்லாத அளவுக்கு சீன யுத்த விமானங்கள் ஊடுருவியுள்ளதாக தாய்வானின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 25க்கும் மேற்பட்ட சீனாவின்
குண்டுவீச்சு யுத்த விமானங்கள் மற்றும் அணு ஆயுதம் தாங்கி தாக்குதல் நடத்தக்கூடிய விமானங்கள் உட்பட பல்வேறு விமானங்கள் தாய்வானின் வான்வழி பாதுகாப்பு அடையாளப்படுத்தல் வளையத்துக்குள் ஊடுருவியுள்ளதாக தாய்வான் அறிவித்துள்ளது.

சீனாவின் யுத்த விமானங்கள் பாரிய அளவில் தாய் வானுக்குள் ஊடுருவியுள் மை இதுவே முதற் தடவையாகும் இது சீனாவின் அத்துமீறிய ஆக்கிரமிப்பு வெறியை வெளிப்படுத்துவதாக அமெரிக்கா இந்த சம்பவம் குறித்து உடனடியாக கண்டனமும் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. தாய்வான் சீனாவிலிருந்து பிரிந்த ஒரு மாநிலம் என்பது அமெரிக்காவின் நிலைப்பாடு. ஆனால் தாய்வான் தனது கட்டுப்பாட்டுக்குள் உள்ள ஒரு பிரதேசம் என்பது சீனாவின் வாதமாகும். இந்த நிலைப்பாடுகள் காரணமாக இந்த வான் பரப்புக்குள் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...