பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் அடக்குமுறைகளை பாகிஸ்தான் வன்மையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது!

Date:

முஸ்லிம்களின் புனித ரமழான் மாதத்தின் ஆரம்பத்திலிருந்து இஸ்ரேல் பாலஸ்தீனர்களின் மத்திய ஜெரூசலத்தை மூடியுள்ளது.இது குறித்து பாகிஸ்தான் தனது கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளது.

“ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பாலஸ்தீன பிரதேசங்களின் மோசமான நிலை குறித்து பாகிஸ்தான் கவனம் செலுத்தி வருகிறது.பிரார்த்தனைக்காக வரும் மக்களை துன்புறுத்துவது , அப்பாவி பாலஸ்தீனியர்களை கைது செய்வது என்பன அடிப்படை மனித உரிமை களை மீறும் செயற்பாடாகவே உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த அறிக்கை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை செயல்களை வன்மையாக கண்டித்தும் பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச சமூகத்தை வலியுறுத்தியுள்ளது.

பாலஸ்தீனியர்களின் உரிமையை பாதுகாக்கவும் , வென்றெடுக்கவும் பாகிஸ்தான் உறுதியுடன் செயற்படுவதாகவும் , எல்லைப் பிரச்சினையில் ஐக்கிய நாடுகள் மற்றும் ஒ.ஐ.சியினுடைய தீர்மானங்களின் பிரகாரம் இரு மாநிலமும் இதற்கு தீர்வு காண வேண்டியுள்ளது.”குட்ஸ்-அல்-ஷெரீப் ஒரு சாத்தியமான மற்றும் சுயாதீனமான பாலஸ்தீனிய அரசின் தலைநகரமாக உள்ளது என்றும் இந்த அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.

ரமழான் தொடக்கத்திலிருந்து பாலஸ்தீனியர்களை டமஸ்கஸின் வாயில் பகுதியில் பண்டிகை நடவடிக்கைகளில் ஈடுபட இஸ்ரேலிய படைகள் தடை விதித்துள்ளது.பிளஷ் பொயின்ட் நகரில் பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலியர்கள் தாக்குதல்களை நடாத்திய போதே நிலைமை மேலும் மோசமடைந்தது.கடந்த வியாழக்கிழமை முதல் ஜெரூசலமில் இஸ்ரேலிய படைகளுக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் இடையிலான மோதலில் 130க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளதோடு, 100ற்கு அதிகமானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெரூசலம் உள்ளிட்ட பலஸ்தீன பிரதேசங்கள் 1967 முதல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் இருந்து வருகின்றன.இஸ்ரேலிய ஆக்கிரமிப்பானது சட்டவிரோதமானது என சர்வதேச சட்டத்தினால் கருதப்படுகிறது.

 

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...