முஸ்லிம் உலகம் மற்றுமோர் இஸ்லாமிய ஆளுமையை வழியனுப்பியது; இந்திய உப கண்டம் ஈன்றெடுத்த ஒரு தனித்துவமான இஸ்லாமிய அறிஞரே மௌலானா வஹீதுத்தீன் கான் அவர்கள்.
அவர் ஒரு பன்முக ஆளுமை; ஒரு சிந்தனையாளர்; எழுத்தாளர்; பேச்சாளர்; அனைத்துக்கும் மேலாக ஒரு சிறந்த அழைப்பாளர்.
அவரது சில சிந்தனைகளுடனும் நிலைப்பாடுகளுடனும் முரண்படுவோரும் அவரது அறிவாளுமையை, சிந்தனா ஆற்றலை, இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்திற்கான அவரது பங்களிப்பை அங்கீகரிக்கத் தவறுவதில்லை.
தனது இலட்சியப் பணியை தொடரக்கூடிய ஒரு சீடர் பரம்பரையை அன்னார் உருவாக்கிவிட்டே பயணித்திருக்கின்றார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் நற்காரியங்களை ஏற்று, பாவங்களை மன்னித்து உயர் சுவன வாழ்வை வழங்குவானாக!
மௌலானாவின் பணியை தொடரும் உணர்வையும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அவர்களின் மாணாக்கர்களுக்கும் தொண்டர்களுக்கும் வழங்கியருள்வானாக!
அஷ்ஷேக் அகார் முஹம்மத்