`மூன்றாம் நிலை உருமாறிய கொரோனா இந்தியாவில் பரவுகிறதா?’ | மருத்துவரின் விளக்கம்

Date:

கடந்தாண்டு இங்கிலாந்தில் B.1.1.7 எனும் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன்பிறகு தென் ஆப்பிரிக்காவில் B.1.351, பிரேசிலில் P.1 வைரஸ்கள் என உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுகள் கண்டறியப்பட்டன.

கொரோனா இந்தியாவில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகும்கூட, லாக்டெளன் கொண்டு வரும் அளவிற்கு தாக்கம் அதிகமாக இருக்கிறது. கடந்த ஆண்டைவிட மரணங்களும் அதிகரித்திருக்கின்றன. இந்தியாவில் கடந்த ஆண்டைவிட இந்த பாதிப்பு அதிகமாக இருப்பதற்கு இரட்டை உருமாறிய கொரோனா வைரஸ் தான் காரணம் என்பது பல மருத்துவர்களாலும் சொல்லப்படும் கருத்தாக இருக்கிறது.

கோவிட் 19 வைரஸ் கடந்தாண்டில் இருந்து தற்போது வரை பல உருமாற்றங்களை கண்டுள்ளது. கடந்தாண்டு இங்கிலாந்தில் B.1.1.7 எனும் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பிறகு தென் ஆப்பிரிக்காவில் B.1.351, பிரேசிலில் P.1 வைரஸ் என உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டன. இதையடுத்து இந்தியாவிலும் உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து தொடர்ந்து ஆராய்ச்சிகளும் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவில் முதலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனவரி 2021 முதல் மார்ச் 2021 வரை எடுக்கப்பட்ட மாதிரிகளில் 61 சதவிகித மாதிரிகளில் B.1.617 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்தது.

முதல் வகை கொரோனா வைரஸைவிட, உருமாறிய கொரோனா வைரஸ் அதிக ஆபத்துகளை விளைவிப்பதாக மருத்துவர்கள் பலரும் தெரிவித்து வந்தனர். அதற்கேற்றாற்போல் கடந்த சில மாதங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட அதிகமாகவே இருக்கிறது. இந்த இரண்டாம் அலை ஓய்வதற்குள். மற்றுமோர் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து தொற்றுநோய் மருத்துவர் சித்ராவிடம் பேசினோம்.

” ஒரு வைரஸ் எப்போதும் அதன் தன்மையை மாற்றி உருமாற்றிக் கொண்டே தான் இருக்கும். இப்படி வைரஸ் உருமாறும்போது அதன் வீரியம் அதிகமாகலாம், அல்லது குறையலாம். இரண்டுக்குமே சமஅளவு வாய்ப்புகள் உண்டு.

இப்போதைக்கு இந்தியாவில் டபுள் மியூட்டன்ட் வைரஸ் தான் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ட்ரிப்பிள் மியூட்டன்ட வைரஸ் உருவாக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் மத்திய அரசிடமிருந்து எந்த அதிகாரபூர்வ தகவல்களும் இதுவரை வெளிவரவில்லை. தொடர்ந்து சோதனைகள் நடைபெற்று வருகின்றன. ட்ரிப்பிள் மியூட்டன்ட் வைரஸ் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால்தான் சோதனைகளுக்குப் பின் அதன் வீரியத்தன்மை பற்றி சொல்ல இயலும்” என்றார்.

நன்றி விகடன் 

Popular

More like this
Related

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...