ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது… “தேர்தலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை”

Date:

திரைத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை பெற்றிருக்கிறார், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் !

சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருதை ஒவ்வொரு ஆண்டும் யார் பெறப்போகிறார் என்ற ஆர்வம் சினிமா ஆர்வலர்கள் மத்தியில் இருக்கு. இந்த முறை 51வது தாதா சாகேப் பால்கே விருதை ரஜினிகாந்துக்கு அறிவித்து கெளரவித்திருக்கிறது மத்திய அரசு.

சினிமா துறையில் சாதித்தற்காக கொடுக்கப்படும் விருதுதான், தாதாசாகேப் பால்கே விருது. இந்திய சினிமாவின் தந்தை என அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கேவின் நினைவாக, இந்திய அரசு 1969-ம் ஆண்டிலிருந்து அவர் பெயரில் விருதினை வழங்கி வருகிறது. இதனை முதலில் பெற்றவர், இந்தி நடிகை தேவிகா ராணி. சமீபத்தில் 2018-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது கொடுத்து கெளரவித்தது இந்திய அரசு.

இதுவரை தமிழில் இருந்து நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் கே.பாலச்சந்தர் ஆகியோர் இந்த உயரிய விருதினை பெற்றிருக்கிறார்கள். இவர்களைத் தொடர்ந்து, தற்போது, நடிகர் ரஜினிகாந்த் தாதா சாகேப் பால்கே விருதை பெற்றிருக்கிறார். ஏற்கெனவே, மத்திய அரசுடைய பத்மபூஷன், பத்மவிபூஷன் ஆகிய விருதுகளை ரஜினிகாந்த் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. விருதை அறிவித்துவிட்டு பேசிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “தமிழக தேர்தலுக்கும் ரஜினிக்கு விருது அறிவித்ததற்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று சொல்லியிருக்கிறார்.

நன்றி விகடன்

Popular

More like this
Related

5ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கு அறிவித்தல்

2025 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளுக்கமைய பாடசாலைகளில்...

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...