நாட்டின் கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை அடுத்த கட்டமாக யாழ்ப்பாணம் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பு செயலணியின் பிரதானி இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் , நேற்று முதல் காலி, குருணாகல் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.